குட் பேட் அக்லிக்கு பின் அஜித் செய்யப்போகும் தரமான சம்பவம்!.. ரசிகர்களுக்கு ஃபுல் ட்ரீட்தான்!..
Ajithkumar: தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். 30 வருடங்களாக விஜயின் போட்டி நடிகராக இருக்கிறார். விஜய்க்கு டான்ஸ், காதல் காட்சிகள் எனில் அஜித்திற்கு அவரின் தோற்றமும், மாஸ் காட்சிகளும்தான். பில்லா படத்தில் ஸ்டைலீஸான மாஸ் நடிகராக மாறினார். மங்காத்தா திரைப்படம் அவருக்கு அதிக ரசிகர்களை பெற்று தந்தது.
விஜய்க்கு எப்படி பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறதோ அதேபோல அஜித்திற்கும் ரசிகர்களுக்கும் உண்டு. விஜய் தனது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து இப்போது அதை அரசியல் இயக்கமாகவும் மாற்றிவிட்டார். ஆனால், அஜித்தோ பல வருடங்களுக்கு முன்பே தனது ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்டு எதிலும் ஒட்டாமல் இருக்கிறார்.
அஜித்துக்கு சினிமாவில் நடிப்பது தொழில் மட்டுமே. அது அவரின் ரசிகர்களுக்காக. ஆனால், பைக் ஓட்டுவது, கார் ரேஸில் கலந்து கொள்வது, ரிமோட் மூலம் ஹெலிகாப்டர் இயக்குவது, துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொள்வது என அவருக்கு பிடித்தமான பொழுதுபோக்கு நிறைய இருக்கிறது.
சமீபத்தில் கூட பயணம் செல்வது பற்றி அஜித் பேசியிருந்த வீடியோ இணையத்தில் வைரலானது. அஜித் இப்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே நடித்த விடாமுயற்சி படத்தில் ஒரு பாடல் கட்சி மட்டுமே இன்னும் எடுக்க வேண்டியிருக்கிறது.
குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு வெனிஸ் நகரத்தில் நடைபெற்று வருகிறது. அஜித் இப்போது அங்குதான் இருக்கிறார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு பின் ஒரு பேன் இண்டியா படத்தில் அஜித் நடிக்கவிருக்கிறார் என சொல்லப்படுகிறது. அனேகமாக கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இப்படத்தை இயக்குவார் என கணிக்கப்படுகிறது.
இன்னும் சில நாட்களில் இது தொடர்பான ஒப்பந்தத்தில் அஜித் கையெழுத்திடுவார் எனவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் சொல்கிறார்கள். ரஜினி, விஜய், சூர்யா ஆகியோர் பேன் இண்டியா நடிகர்களாக மாறிவிட்ட நிலையில் அஜித்திற்கும் அந்த ஆசை வந்திருக்கலாம் என கருதப்படுகிறது. அனேகமாக அது அஜித்தின் 64 அல்லது 65வது படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.