விஜய் கட்சி இதைத் தான் சொல்லுதா? காலில் விழும் கலாச்சாரம் இங்கும் விடலையே! விளாசிய பிரபலம்

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:40:07  )

விஜய் புதிதாக ஆரம்பித்துள்ள கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம். மாநாட்டுக்கான வேலைகள் ஜரூராக நடந்து வருகிறது. அக்டோபர் 27ம் தேதி தீபாவளியை நெருங்கும் சமயம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள 'வி' சாலையில் நடக்கிறது.

விஜய் மற்ற கட்சியை மாதிரி இதை நினைச்சிடாதீங்க. இது ஏதோ பேருக்கு ஆரம்பிச்சது இல்ல. மற்றவங்களுக்கு அரசியலை சொல்லித் தரும் என்று எல்லாம் பீடிகை போட்டுள்ளார். மாநாடு வரட்டும் பார்ப்போமே என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

அந்த வகையில் பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமியும் ஒரு கருத்தை முன்வைத்துள்ளார். அதில் இப்படி சொல்கிறார். விஜயைப் பொருத்த வரை அவர் எந்த அரசியல் மேடையையும் பார்த்தது இல்லை. பேசியது இல்லை. ஏதோ எழுதிக் கொடுத்ததை சொல்றாரு. கூடுற கூட்டத்தை வச்சி அதெல்லாம் ஓட்டா மாறிடும்னு சொல்ல முடியாது.

விஜய் கட்சியோட பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த். இவர் எந்த வித அரசியல் அனுபவமும், பண்பாடும் இல்லாதவர். இவர் காலில் நான் கட்சியில சேருகிறேன்னு நடிகர் தாடி பாலாஜி விழுகிறார். பெரியவங்க காலில விழுந்தா தப்பில்ல. இப்படி விழுந்ததால என்ன வெங்காயம் நடந்துடப் போகுது?

இவங்க ரெண்டு பேரும் தான் கட்சியோட முகமா அறியப்படப் போறாங்க. சிவாஜி, விகே.ராமசாமி எல்லாரும் மக்கள்கிட்ட இருந்து சம்பாதிச்ச பணத்தை ஒரு அளவுக்கு மேல இருந்தா நாம கொடுத்துடணும். இல்லன்னா அது நிக்காதுன்னு சொல்வாராம். அப்படித் தான் படம் எடுத்து எல்லா பணத்தையும் அவரு காலி பண்ணினாரு.

என்எஸ்கே மாதிரி ஒண்ணு எல்லா பணத்தையும் மக்களிடம் நேரடியா கொடுத்துடணும். இல்லன்னா அந்தப் பணம் நிக்காது. அடுத்த தலைமுறை காலி பண்ணிடும். அப்படித் தான் விஜயும். அவர் வாங்குற 200 கோடி மக்கள் பணம் தான். அவரால் கொடுக்க முடியலன்னு கட்சி ஆரம்பிச்சிருக்காரு போல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story