KPY Bala: விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பிரபலமாக இருந்த கேபிஒய் பாலா தற்போது சொல்லி இருக்கும் தகவல் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் முக்கியமாக அமைந்தது கலக்கப்போவது யாரு. இதில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் விஜய் டிவியில் மிகப்பெரிய வரவேற்பு பெறுவது வழக்கம்தான்.
அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் முக்கிய டைட்டில் வின்னரான கேபிஒய் பாலா தன்னுடைய தனி ஸ்டைல் காமெடிகளால் ரசிகர்களிடம் பெரிய அளவு புகழை பெற்றவர். இதைத்தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முக்கிய கோமாளியாக களமிறங்கினார்.
அந்த நிகழ்ச்சியில் பெரிய அளவில் அறியப்பட்டாலும் தன்னுடைய தொடர் உதவிகளால் பாலாவிற்கு ரசிகர்களிடம் நல்ல பெயர் உருவானது. கல்லூரி செல்ல முடியாத பெண்களுக்கு கொடுக்கும் உதவியாக இருக்கட்டும், பெட்ரோல் பங்கில் வேலை பார்த்தவருக்கு கொடுத்த திடீர் பைக் பரிசு என பாலாவை பாராட்டதவர்கள் இல்லை.
இவரை போல மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வரும் ராகவா லாரன்ஸும் இவருடன் சேர்ந்து தற்போது உதவிகளை செய்து வருகிறார். பாலா தற்போது கோலிவுட்டில் ஹீரோவாக நடிக்கும் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாலா கடைசி வரைக்கும் நன்றி உள்ளவராக இருக்க வேண்டும். என்னால் முடிந்தவரை அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். என்னுடைய ஒரு படம் முடிய இருக்கிறது. விரைவில் வெளி வரும்.
எனக்கு பொதுவாழ்க்கையில் வரும் ஆசையெல்லாம் இல்லை. நம்மால் முடிந்ததை மக்களுக்கு செஞ்சிட்டே இருக்கணும். அதுதான் என்னுடைய போதை. நடிகர்கள் போதை பழக்கத்தில் அடிமையாகும் விஷயம் குறித்து எனக்கு தெரியாது எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
