அடித்து நொறுக்கிய அமரனின் 3வது நாள் வசூல்... எவ்வளவு தெரியுமா?
சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் அமரன் படத்திற்கு அமோக ஆதரவு வந்துள்ளது. ராணுவத்தை மையமாகக் கொண்ட கதை என்பதாலும் உண்மைச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதாலும் படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகநாயகன் கமல் பேனரில் வெளியான படம் என்பதாலும் சிவகார்த்திகேயன் முதன்முதலாக கமலின் படத்தில் நடிப்பதாலும் ரசிகர்கள் படம் பார்க்க ஆர்வமுடன் வருகின்றனர்.
இது மறைந்த ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக். இவரது வேடத்தில் சிவகார்த்திகேயனும், இவரது துணைவியார் இந்து ரெபேக்கா வர்க்கீஸ் வேடத்தில் சாய்பல்லவியும் நடித்துள்ளனர். படம் முழுக்க சிவகார்த்திகேயனின் அர்ப்பணிப்பான நடிப்பு தெரிகிறது.
அதே போல சாய்பல்லவியும் ரொம்பவே மெனக்கிட்டு நடித்துள்ளார். மணிரத்னமே இவரது நடிப்பைப் புகழ்ந்து தள்ளியுள்ளார். முதல் நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின்,, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் படம் பார்த்து கமலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அமரன் படம் தீபாவளி அன்று திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதன் 2 நாள் வசூல் இந்தியா முழுவதும் 40.55 கோடியைத் தொட்டது. 3வது நாளில் 21.75 கோடியை வசூலித்துள்ளது.
இது முன்னதாகவே எடுக்கப்பட்ட கணக்கின் அடிப்படையில் உள்ள தொகை. நாளுக்கு நாள் அமரன் படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் அதிகமான ரசிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயனின் திரையுலகப் பயணத்தில் இது ஒரு மைல் கல் என்றே சொல்ல வேண்டும். படத்தைப் பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினரை அழைத்துப் பாராட்டியுள்ளார்.
சிவகார்த்திகேயனுக்குப் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். கண்ணா நடிப்பில் சும்மா பின்னிட்ட என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவருடன் சந்தித்து எடுத்துக் கொண்ட போட்டோக்கள் வைரலாகி வருகிறது.