6வது நாள் வசூலில் அசத்திய அமரன்... வசூல் குறித்து SK சொன்ன விஷயம்..!
தீபாவளிக்குத் திரைக்கு வந்தப் படங்களில் அடிச்சித் தூக்கி கலெக்ஷனை அள்ளி இன்று வரை பட்டையைக் கிளப்பிக் கொண்டு இருக்கும் படம் அமரன். இந்தப் படத்தின் வசூல் குறித்தும், சிவகார்த்திகேயன் என்ன சொல்கிறார் என்பது பற்றியும் பார்ப்போம்...
உலகளவில் அமரன் படம் 5வது நாள் வசூலில் 155 கோடியைத் தொட்டது. இந்திய அளவில் 6வது நாள் வசூல் 100 கோடியை நெருங்கியது. அதாவது 6வது நாள் மாலை 6 மணி வரை எடுத்த கணக்கின்படி 97.28 கோடியை வசூலித்துள்ளது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமலின் தயாரிப்பில் எடுக்கப்பட்ட பிரம்மாண்டமான படம் அமரன். சிவகார்த்திகேயனோட மார்க்கெட்டில் இது ஒரு மைல் கல் படம். அவரது அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இது தான் வலுவான அடித்தளமாக அமையப் போகிறது. சிவகார்த்திகேயன் இந்தப் படத்தின் வசூல் எனக்கு ரொம்ப முக்கியம் என்கிறார்.
ஏன்னா அப்போது தான் இன்னும் இதுபோல பெரிய பட்ஜெட்டில் சூப்பரான படங்களை ரசிகர்களுக்குக் கொடுக்க முடியும். அதற்கான உத்வேகத்தை இந்தப் படம் ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் நான் அந்தப் படத்தின் வசூலை முறியடித்துவிட்டேன் என்று எல்லாம் சொல்வதில் எனக்கு விருப்பமில்லை. இந்தப் படத்தை எடுக்க முன் எடுத்தவர்களின் முயற்சிக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் எத்தகைய உயரத்திற்கு நாம் போனாலும் அதை தலையில் ஏற்றிக்கொள்ளக் கூடாது. அதைவிட பெட்டரா அடுத்த விஷயத்தைச் செய்து காட்ட வேண்டும் என்கிறார்.
இந்தப் படத்தை விட பெரிய ஹிட்டை என்னால் அடுத்து கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். படத்தின் மவுசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிவகார்த்திகேயனின் கேரியரிலேயே அதிக வசூலைப் பெற்ற படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.