Amaran: 2K கிட்ஸ்லாம் எங்கேயோ போய்க்கிட்டு இருக்காங்க... இப்போ சாதி வெறி தேவையா? விளாசிய பிரபலம்
அமரன் படம் குறித்து சாதீய ரீதியான சர்ச்சை ஒன்று போய்க்கொண்டு இருக்கிறது. இதுகுறித்து பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு என்ன சொல்கிறார்னு பார்ப்போம்.
அமரன் படத்தில் வீரசக்ரா விருது வாங்கிய மிகப்பெரிய வீரனின் கதை. படத்தைப் பற்றி இப்போது ஒரு சர்ச்சை போய்க்கொண்டு இருக்கிறது. இந்தப் படத்தில் வீரனின் வரலாறு எடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இதற்குள் ஜாதி அடையாளம் தேவையில்லை. ஆனால் படத்தில் பிராமண வகுப்பைப் பற்றி ஒரு இடத்தில் கூட சொல்லவில்லை என ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி கேட்டுள்ளார்.
மேஜர் முகுந்த் வரதராஜன் அந்த வகுப்பைச் சேர்ந்தவர். ஆனால் படத்தில் அவர் தனது தந்தையை 'நைனா' என்றே சொல்வதாகக் காட்டப்பட்டுள்ளது என்று படத்திற்கு எதிராக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்தப் படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி 3 வருடமாக கதைகளத்தில் பணியாற்றித் தான் எடுத்துள்ளார்.
2012ல் படம் எடுத்த இந்த இயக்குனரை அழைத்து கமல் வாய்ப்பு கொடுத்துள்ளார். அவர் சும்மா விடுவாரா? படத்தை செதுக்கி இருக்கிறார். சிவகார்த்திகேயன் 3 ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் படத்தின் கதையைக் கேட்டுவிட்டார். அதன்பிறகு அவர் இயக்குனரிடம் விசாரிக்கும்போது எல்லாம் படத்திற்கான கதை விவாதம் போய்க்கொண்டிருப்பதாகவே சொல்வாராம்.
அந்தளவு படத்தைப் பார்;த்துப் பார்த்து எடுத்து இருக்கிறார். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் முகுந்த் வரதராஜனின் தந்தையே அவரை மதம், சாதிக்குள் சுருக்கிவிட வேண்டாம். அந்த அடையாளம் தேவையில்லை. அவர் ஒரு தமிழன், இந்தியன் என்று காட்டினால் போதும் என்றாராம்.
முகுந்தோட மனைவி அவர் ஒரு தமிழ்ப்பற்றாளர். பாரதியார் கவிதைகள் எல்லாம் படிக்கக்கூடியவர். அதனால ஒரு தமிழ் ஹீரோ நடிச்சா நல்லாருக்கும்னு சொன்னதால சிவகார்த்திகேயன் உள்ளே வந்தாராம். அதனால் அமரன் படத்தின் மீது சாதி வெறி திணிக்கப்படுவது தேவையில்லாத ஒன்று. கமலுக்கு இதே வேலையாப் போச்சுன்னுலாம் சொல்றாங்க.
ஆனா விஸ்வரூபம் பிரச்சனை பெரிய அளவில் எடுக்கும்போது அவர் நான் நாட்டை விட்டே போகிறேன் என்று சொன்ன பிறகு தான் படத்தையே ரிலீஸ் பண்ண அனுமதிச்சாங்க. அந்தவகையில் அமரன் படத்தின் மீது இப்படி சாதி, மத ரீதியாக விமர்சனம் வைப்பது எந்தவிதத்தில் நியாயம்? இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
2கே கிட்ஸ் எல்லாரும் சாதி, மதம் கடந்து எங்கேயோ போய்க்கிட்டு இருக்காங்க. இந்த நேரத்துல இன்னமும் ஜாதி ஜாதி ஜாதின்னு இதெல்லாம் தேவையா? நேற்று நடந்த சக்சஸ் மீட்ல ராஜ்குமார் பெரியசாமி விளக்கம் கொடுத்துள்ளார். அதற்கு நீண்ட விளக்கம் கொடுத்து இருக்கலாமே என்றும் செய்யாறு பாலு தனது ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளார்.