நம்பிடாதீங்க... எல்லாமே வெறும் நடிப்பு... சாய்பல்லவியை ட்ரோல் செய்த நெட்டிசன்கள்
சாய்பல்லவி அமரன் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். கதைப்படி மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் ஆக நடித்துள்ளார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி. சிவகார்த்திகேயன் தான் மேஜர் முகுந்த் வரதராஜனின் கேரக்டரில் நடித்துள்ளார்.
காஷ்மீர் தீவிரவாதிகளுடன் நடந்த போரில் உயிர் துறந்தவர் தான் இவர். சாய்பல்லவி ஏற்றுள்ள கேரக்டரைக் கண்டு இயக்குனர் மணிரத்னமே பாராட்டியுள்ளார். தற்போது அமரன் படத்தின் புரொமோஷன் பணிகள் நடந்து வருகிறது.
அந்த வகையில் சாய்பல்லவி குறித்து இப்போது ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. சமீபத்தில் சாய்பல்லவி தேசிய போர் நினைவிடத்துக்குச் சென்று மேஜர் முகுந்த் வரதராஜன், சிப்பாய் விக்ரம் சிங் ஆகியோருக்கு மரியாதை செலுத்தி போட்டோ எடுத்துக் கொண்டு அதை வெளியிட்டுள்ளார். இது வைரல் ஆகியுள்ளது. கூடவே இது சர்ச்சையையையும் கிளப்பியுள்ளது.
சமீபத்தில் சாய்பல்லவி பாகிஸ்தானில் இருப்பவர்களை நம் நாட்டு ஜவான்கள் தீவிரவாதிகள்னு தான் சொல்வாங்க. ஆனா நம்மைத் தாக்குறவங்களை நாம அப்படித்தான் சொல்றோம். அதனால அவர்களைத் தாக்குபவர்களையும் அவங்க அப்படித்தான் சொல்வாங்க என பேசினார்.
அதற்கு உதாரணமாக தி காஷ்மீரி பைல்ஸ் என்ற படத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார். இது பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. இதற்கு நெட்டிசன்கள் பயங்கரமாக விமர்சனம் செய்து இருந்தனர். அவரைத் தீவிரவாதின்னும் குறிப்பிட்டு இருந்தாங்க.
இப்போது மேஜர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தியதும் நான் உணர்ச்சிகளால் நிறைந்து இருந்தேன்னு சாய்பல்லவி சொல்றாங்க. இது அவர் போடும் டிராமா. எதுக்கு இதெல்லாம்? என்று கேட்ட நெட்டிசன்கள் அவர் பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாகப் பேசிய வீடியோவையும் கூடவே போட்டு எல்லாமே வெறும் நடிப்பு தான்னு சொல்லியிருக்காங்க.
உலகநாயகன் கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் தான் சாய்பல்லவி ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த நேரத்தில் இதுபோன்ற சர்ச்சைகள் எல்லாம் சாய்பல்லவிக்குத் தேவையா என்றே கேட்க வேண்டியுள்ளது.