எஸ்.கே-விற்காக சம்பவம் பண்ண போகும் லோகேஷ்!.. இது வேறமாறி அப்டேட்டா இருக்கே!...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:35:34  )

Lokesh: சிவகார்த்திகேயன் நடிப்பில் சரியாக இருக்கும் அமரன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் அமரன் திரைப்படம் உருவாகி வருகிறது. படம் மறைந்த ராணுவ அதிகாரி முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கிறார்.

இப்படத்தின் முதல் கட்ட டீசர் வெளியான போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் உயர்ந்தது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷனை படக்குழு தொடங்கி இருக்கிறது. இதில் முகம் வரதராஜன் மனைவி ரபேக்கா கலந்து கொண்டு பேசியது இணையத்தில் வைரலாக பரவியது.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது. அதில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். முக்கியமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டு பேசியதுதான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அவர் பேசும்போது, திரைப்படம் கமர்சியல் படம் கிடையாது. நம் நாட்டுக்காக ஒருவர் ராணுவத்திற்கு சென்று தன் உயிரை விட்ட முக்கிய சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் திரைப்படம். இது நமக்கும் மற்றும் நம் நாட்டிற்கும் பெருமை.

சமீபத்தில் நான் இப்படத்தை கமல்ஹாசன் சார் பார்க்கும்போது ஒரு பாக்ஸ் டிஸ்யூவை வைத்துக் கொண்டுதான் பார்த்ததாக தகவல்கள் வெளியானது. அத்தனை அளவுக்கு படம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என தெரிவித்தார்.

அவரிடம் தொகுப்பாளர் எங்களுடைய டானை வைத்து எப்பொழுது படம் பண்ண இருப்பதாக கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ், ரொம்ப நாட்களாக பேசிக் கொண்டிருக்கும் விஷயம் தான். அதான் துப்பாக்கியை கையில் வாங்கி விட்டாரே விரைவில் நடக்கும் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

Next Story