இந்திய சினிமா வரலாற்றில் முதன் முறையாக!.. அமரன் கொடுக்கப்போகும் சூப்பர் ட்ரீட்!...
Amaran movie: கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் திரைப்படம்தான் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருக்கிறார். காஷ்மீரில் தீவிரவாதிகளை சுட்டு கொல்லும் ஆபரேஷனியில் உயிரிழந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் கதை இது.
சிவகார்த்திகேயன் இதுவரை இதுபோன்ற பயோகிராபியில் நடித்தது இல்லை. அதேபோல், இந்த படத்தில் அமைந்தது போல ஒரு கதாபாத்திரமும் அவருக்கு கிடைத்தது இல்லை. இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் மனைவியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறாராம். கண்டிப்பாக வித்தியாசமான சிவகார்த்திகேயனை இந்த படத்தில் ரசிகர்கள் பார்ப்பார் என நம்பப்படுகிறது. படத்தின் டீசர் வீடியோவும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. குறிப்பாக, இந்த படத்தில் பல சிறப்பம்சங்கள் இருக்கிறது.
இந்தியாவில் இதுவரை ராணுவ அதிகாரி தொடர்பாக பல திரைப்படங்கள் வந்திருக்கிறது. கிட்டத்தட்ட பெரும்பாலான ஹீரோக்கள் ராணுவ வீரராக நடித்திருக்கிறார்கள். ஆனால், அதில் எல்லாம் இல்லாத சில சிறப்பம்சங்கள் இந்த படத்தில் இடம் பெற்றிருக்கிறது. அதாவது, இதுவரை திரைப்படங்களில் காட்டாத பல முக்கிய இடங்களை இந்த படத்தில் காட்டியிருக்கிறார்களாம்.
காஷ்மீரில் ஷோபியான் என ஒரு ஊர் இருக்கிறது. இதுவரை அங்கே சினிமா படப்பிடிப்பே நடந்தது இல்லையாம். சிறப்பு அனுமதி வாங்கி அங்கே படப்பிடிப்பு நடந்திருக்கிறது. அதோடு, முகுந்த் வரதராஜன் தங்கியிருந்த ராணுவ முகாம்களிலும் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.
சென்னையில் ராணுவ பீரங்கிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஓடிஎன் என்கிற இடத்திலும் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார்கள். முதல் முறையாக அங்கு படப்பிடிப்பு நடந்திருக்கிறது. இதற்கு முன் எந்த படத்திற்கும் அங்கு அனுமதி கிடைத்தது இல்லை என்கிறார்கள். இதையெல்லாம் கேட்கும்போது அமரன் படம் மீது எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது என்றே சொல்லலாம்.