தமிழ்நாட்டை தாண்டி அக்கட தேசத்துல பிச்சுகிட்டு ஓடும் அமரன்... அதுக்கு காரணமே அவங்க தான்...!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:30:39  )

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்து வருகின்றார் நடிகர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து சிறந்த படங்களை கொடுத்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கின்றார். ஒரு கமர்சியல் நடிகராக காமெடி கதாபாத்திரங்களில் நடித்து மக்களை சிரிக்க வைத்து வந்த சிவகார்த்திகேயன் திடீரென்று ஒரு ஆக்சன் ஹீரோவாக களமிறங்குகின்றார் என்ற செய்தியை கேட்டதும் பலருக்கும் இருந்த சந்தேகம் அந்த திரைப்படம் ஓடுமா? சிவகார்த்திகேயனுக்கு அது பொருந்துமா? என்பது தான்.

ஆனால் அமரன் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த கணிப்பையும் தவிடு பொடியாக்கி இருக்கின்றார். தன்னாலும் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக நடிக்க முடியும் என்பதை செய்து காட்டி இருக்கின்றார். நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் வெளியானது.

இந்த திரைப்படம் நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. இந்த திரைப்படத்தில் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். ராணுவ உடையில் கம்பீரமாக அதற்காக பல பயிற்சிகளை எடுத்து சிறப்பாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் சிவகார்த்திகேயனின் கேரியரில் ஒரு முக்கிய திரைப்படமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நேற்று வெளியான இந்த திரைப்படத்திற்கு தொடர்ந்து பாசிடிவான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. இதனால் வரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது. இப்படம் தமிழகத்தில் மட்டும் 13 கோடி வசூல் செய்திருக்கின்றது. உலக அளவில் 23 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

இந்நிலையில் தமிழகத்தில் மட்டுமில்லாமல் அமரன் திரைப்படம் கேரளா மற்றும் ஆந்திராவில் சக்க போடு போட்டு வருகின்றதாம். தமிழகத்தை தாண்டி ஆந்திராவில் அதிக திரையரங்குகளில் அவரின் திரைப்படம் வெளியாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதற்கு காரணம் நடிகை சாய் பல்லவி. அமரன் திரைப்படத்தில் இந்து ரெபேக்கா வர்கீஸ் என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார் என்பதை தாண்டி அந்த கதாபாத்திரமாகவே அப்படத்தில் வாழ்ந்திருக்கின்றார் என்று கூறவேண்டும்.

சிவகார்த்திகேயனுக்கு எந்த அளவு முக்கியத்துவம் இருக்கின்றதோ அதே அளவுக்கு முக்கியத்துவம் சாய்பல்லவிக்கும் இந்த திரைப்படத்தில் இருக்கின்றது. நடிகை சாய் பல்லவிக்கு கேரளா மற்றும் ஆந்திராவில் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். தெலுங்கு சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சாய் பல்லவி. அவருக்காகவே அமரன் திரைப்படத்தை பார்ப்பதற்கு ஏகப்பட்ட கூட்டம் திரையரங்குக்கு படையெடுத்து வருகின்றதாம்.

இதனால் ஆந்திராவில் 450 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் அமரன் திரைப்படம் ரிலீஸ்-ஆகி ஓடிக்கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதேபோல் கேரளாவிலும் மிகச்சிறந்த நடிகையாக அறியப்பட்டவர் நடிகை சாய் பல்லவி. அங்கும் அமரன் திரைப்படத்திற்கு ஒரு நல்ல வரவேற்பு இருக்கின்றது என கூறி வருகிறார்கள். இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு மட்டுமல்லாமல் சாய்பல்லவிக்கும் ஒரு மிகச்சிறந்த படமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Next Story