நாங்க மட்டும் என்ன தக்காளி தொக்கா? பாகுபலி படக்குழு திடீர் அதிரடி முடிவு

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:36:54  )

Bahubali: நடிகர் பிரபாஸ் நடிப்பில் மாபெரும் வெற்றி படமாக வெளியான பாகுபலி படக்குழு தற்போது ஒரு முக்கிய முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

எஸ்.எஸ்.ராஜ்மெளலி இயக்கத்தில் பேன் இந்தியா திரைப்படமாக வெளிவந்தது பாகுபலி. இப்படத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

180 கோடியில் உருவான இப்படம் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது. முதன் பேன் இந்திய திரைப்படமாக அந்தஸ்த்தை பெற்றது. தொடர்ச்சியாக நல்ல வரவேற்பை குவித்து 600 முதல் 650 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருந்தது. 2015ம் கணக்குபடி இப்படம் தான் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படமாக அந்தஸ்த்தை பெற்றது.

இப்படம் முதல் பாகத்தின் கிளைமேக்ஸில் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற கேள்வி ரசிகர்களிடம் தொக்கி நின்றது. இது பல இடத்திலும் மீம்களாக பரவியது. ஒருகட்டத்தில் ரசிகர்களுக்கு அந்த காரணத்தை அறிய ஆர்வம் பெருக இரண்டாம் பாகத்திற்கான ஆர்வம் ரசிகர்களிடம் பெருகியது.

இதை தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கழித்து பாகுபலி இரண்டு ரிலீஸ் ஆனது. 250 கோடி பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இப்படம் உலகளவில் 1800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. தென்னிந்திய சினிமாவின் அந்தஸ்த்தையே மாற்றியது.

அப்படத்தை தொடர்ந்துதான் தற்போது பிரபல திரைப்படங்கள் இரண்டாம் பாகம் எடுப்பதை வழக்கமாக்கி கொண்டு இருக்கின்றனர். பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் தற்போது அடுத்தடுத்த பாகங்களை ரிலீஸ் செய்வதற்கும் பாகுபலிதான் முதல் என்று கூட சொல்லலாம்.

இந்நிலையில் பாகுபலி படத்தின் மூன்றாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதன் பேச்சுவார்த்தை பணிகளும் தற்போது நடந்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது. பிரபாஸ் தன்னுடைய சலார்2 படத்தை முடித்துவிட்டு இப்படத்தில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

Next Story