இந்த முறையாவது நம்புகிறேன்.. அஜித் பட பிரபலத்தின் மூன்றாவது திருமணம்…

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:34:19  )

Bala: காதல் கிசுகிசு படத்தில் நடித்திருந்த நடிகர் பாலா பல பிரச்சினைகளை தாண்டி தற்போது மூன்றாவது திருமணத்தை செய்திருப்பதாக அறிவித்து இருக்கிறார்.

தமிழில் அன்பு திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பாலா. முதல் படமே ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுக் கொடுத்தாலும் தொடர்ச்சியாக அவருக்கு கோலிவுட்டில் வாய்ப்புகள் அமையவில்லை.

இதைத் தொடர்ந்து சில ஆண்டுகள் கழித்து வீரம் திரைப்படத்தில் அஜித்தின் தம்பிகள் ஒருவராக நடித்திருப்பார். இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி என்றாலும் இவருக்கு சினிமாவில் நடிக்க தொடர்ச்சியாக வாய்ப்புகள் அமையவில்லை.

கடந்த 2010 ஆம் ஆண்டு கேரள பாடகி அம்ருதா சுரேஷ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா என்ற மகள் இருக்கிறார். இவர்கள் திருமண வாழ்க்கையில் பல பிரச்சினைகள் ஏற்பட மனைவியை 2019ல் விவாகரத்து செய்தார்.

இவர்கள் விவகாரம் தொடர்ச்சியாக சர்ச்சையில் இருந்தது. இதையடுத்து, 2021 ஆம் ஆண்டு டாக்டர் எலிசபெத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருடனும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாக 2023 இல் கொடுத்த பேட்டியில் தெரிவித்திருப்பார்.

இதை தொடர்ந்து உடல்நில பிரச்சனையால் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருந்த நடிகர் பாலா பெரிய போராட்டத்திற்கு பின்னர் உயிரிழத்தார். இந்நிலையில் தற்போது மூன்றாவது திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்.

கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த கலூர் பாவகுளத்தில் தன்னுடைய தாய் மாமன் மகள் கோகிலா என்பவரை இன்று காலை திருமணம் முடித்து இருக்கிறார். கடந்த ஒரு வருடம் ஆக என்னுடைய உடல் நிலையில் கோகிலா அதீத அக்கறை காட்டினார். இந்த வாழ்க்கை நன்றாக அமையும் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

Next Story