Cinema History
ரஜினி படத்தின் கதையை கடைசி நேரத்தில் மாற்றிய பாரதிராஜா!.. அட இவ்வளவு நடந்திருக்கா?!….
இயக்குனர் பாரதிராஜா படத்தில் கடைசி நேரத்தில் கதையை மாற்றிய சம்பவம் பற்றி இங்கு பார்ப்போம்…
ஒரு படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிப்பதே கதைதான். அது சரியாக அமையவில்லை எனில் படம் ரசிகர்களை கவராது. அதேநேரம், சில இயக்குனர்கள் கதையே இல்லாமல் படமெடுத்து வெற்றியும் பெறுவார்கள். லோகேஷ் கனகராஜை கூட அதற்கு உதாரணமாக சொல்ல முடியும்.
ஆனால், 90களுக்கு முன்பு சினிமா இப்படி இல்லை. கதைதான் படத்தின் பிரதானமாக இருந்தது. 80களில் பஞ்சு அருணாச்சலம், ஆர்.செல்வராஜ், எழுத்தாளர் சுஜாதா என பல கதாசிரியர்கள் இருந்தார்கள். அவர்களின் பல கதைகள் சினிமாவாக உருவாகி வெற்றி பெற்றிருக்கிறது.
அதேநேரம், சில சமயம் கதாசிரியர் சொல்லும் கதையை விட்டுவிட்டு இயக்குனர்கள் வேறு ஒரு கதையையும் எடுப்பார்கள். அதுபோன்ற சம்பவம் பாரதிராஜா இயக்கிய ஒரு படத்திலேயே நடந்திருக்கிறது. பாரதிராஜா இயக்கிய பதினாறு வயதினிலே படத்தில் வில்லனாக நடித்தார் ரஜினி.
அதன்பின் பல வருடங்கள் கழித்து இருவரும் இணைந்த படம்தான் கொடி பறக்குது. இந்த படத்திற்கு ஆர்.செல்வராஜ் கதை எழுதி இருந்தார். பிரதமரின் பாதுகாவலர்களில் ஒருவராக இருப்பார் ஹீரோ. அவர் ஒரு பெண்ணை காதலிப்பார். அந்த பெண்ணுக்கோ பிரதமரை கொல்ல வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருக்கும்.
ஒருகட்டத்தில் இது மற்றவர்களுக்கு தெரிய வர அந்த பழி ஹீரோ மீது விழும். அதன்பின் கதாநாயகன் எப்படி தன் மீது விழுந்த பழியை போக்குவதோடு, பிரதமரையும் காப்பாற்றுகிறார் என்பதுதான் கொடி பறக்குது படத்தின் கதையாக இருந்தது. இதை படமாக எடுக்க சொல்லிவிட்டு வெறொரு படத்தில் வேலை செய்ய போய்விட்டார் செல்வராஜ்.
2 மாதம் கழித்து அவர் திரும்பிவந்த போது 80 சதவீதம் முடிக்கப்பட்ட படத்தை அவருக்கு போட்டு காட்டினார் பாரதிராஜா. அப்போதுதான் தான் சொன்ன கதையை பாரதிராஜா எடுக்கவில்லை என்பது அவருக்கு தெரிந்தது. தன்னிடம் சொல்லாமல் அவர் கதையை மாற்றியதற்காக அவர் கோபப்பட்டார். செல்வராஜ் சொன்ன கதையை படமாக எடுக்க வேண்டாம் என சிலர் சொன்னதால் வேறு கதையை அவர் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.