‘பன் பட்டர் ஜாம்’ யாரு? பதிலை சொல்லி ஹீரோயினை முகம் சுழிக்க வைத்த பிக்பாஸ் ராஜூ.. ஆரம்பமே இப்படியா?

by ராம் சுதன் |

இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் வந்தவர் தான் பிக் பாஸ் ராஜு. ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒரு காமெடி நடிகராகவே நடித்து வந்தார். கிடைத்த வாய்ப்பை தவற விடக்கூடாது. வந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதுவும் ஒரு நாள் நம்மை வேறொரு இடத்திற்கு அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கையில் இத்தனை காலம் போராடியவர் தான் பிக் பாஸ் ராஜு. இருந்தாலும் அவருடைய இலக்கை அடைய இந்த தளம் போதாது என நினைத்து உலக அளவில் பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் ராஜு.

அந்த நிகழ்ச்சியில் எக்கச்சக்க ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். லட்சக்கணக்கான ரசிகர்களின் ஆதரவை பெற்றார். இருந்தாலும் அவரைப் பற்றி விமர்சனங்கள் எழத்தான் செய்தன. டைட்டில் வின்னராக அவர் பரிசு பெற்றாலும் போட்டி அளவில் அந்த வீட்டில் அவர் என்ன செய்தார் என்ற ஒரு விமர்சனம் அவர் மீது எழுந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரைக்கும் அந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டு வெளியாகும் ஒவ்வொரு போட்டியாளர்களின் எதிர்காலமும் சிறப்பாக அமையும் என்பதே ஒரு பொதுவான கருத்து. ஆனால் 7 சீசன்கள் நடந்து முடிந்த நிலையில் அதில் ஒரு சில பேருக்கு மட்டுமே பிரகாசமான வாய்ப்பு வந்திருக்கிறது.

ஒரு சில பேர் இருந்த இடமே தெரியாமல் காணாமல் போயினர். அப்படி ஒருவர் தான் பிக் பாஸ் ராஜு. பிக் பாஸ்க்கு பிறகு சினிமாவில் அவர் நல்ல முறையில் ஜொலிப்பார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அவர் நடித்து ஒரு படம் கூட வெளியாகவில்லை. அதனால் youtube சேனல் மூலமாக ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வந்தார்.

நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு இப்போது தான் அவர் நினைத்தது நிறைவேறி இருக்கிறது. காலங்களில் அவள் வசந்தம் படத்தை இயக்கிய ராகவ் மிர்தாத் இயக்கத்தில் பன் பட்டர் ஜாம் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் பிக் பாஸ் ராஜு. அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று தான் வெளியாகி இருக்கிறது.

இந்த படத்தில் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி போன்ற பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர். படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். பாபு குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதால் அந்த விழாவில் பேசிய ராஜுவிடம் பன் பட்டர் ஜாம் யார் என்ற ஒரு கேள்வியை நிருபர் முன் வைத்தார்.

அதற்கு பதில் அளித்த ராஜு 'நீங்க வேற. பேரு தான் பன் பட்டர் ஜாம் .ஆனால் என்னுடன் நடித்த ஹீரோயினை இந்தப் படத்தில் தொடவே விடவில்லை' என கூறியிருந்தார் ராஜு. இப்படி சொன்ன பிறகு அருகில் இருந்த ஹீரோயின் பவ்யா ஒரு மாதிரியாக முகம் சுளித்துக்கொண்டு இந்த பக்கம் திரும்பினார். இருந்தாலும் இந்த படத்தில் பன் அப்படிங்கிறது இயக்குனர் தான். பட்டர் ஜாம் அப்படிங்கிறது நாங்கள் எனக் கூறி சமாளித்தார்.

Next Story