லாரியில் அடிபடுவாய், கூமுட்டைனு எப்படி சொல்லலாம்... பயம் வந்துருச்சா... ப்ளூ சட்டை மாறன் பகிர்ந்த ட்வீட்...!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:30:13  )

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வளம் பெறுபவர் நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக இருந்து வருகின்றார். சினிமாவில் லைம் லைட்டில் இருக்கும்போது சினிமாவை எல்லாம் விட்டுவிட்டு அரசியலில் குதித்து இருக்கின்றார். தமிழக வெற்றி கழகம் என்கிற கட்சியை தொடங்கியிருக்கும் நடிகர் விஜய் அதனை அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து தனது கட்சியின் கொடி, பாடல், முதல் மாநாடு என அனைத்தையும் மிகச் சிறப்பாக செய்து முடித்து இருந்தார்.

நடிகர் விஜய் கட்சியை தொடங்கிய போது பலரும் அவருக்கு வரவேற்பு தெரிவித்திருந்தனர். ஆளும் கட்சியான திமுக அமைச்சர்களே வரவேற்கத்தான் செய்தார்கள். ஆனால் அதெல்லாம் நடிகர் விஜய் நடத்திய முதல் மாநாட்டிற்கு முன்புதான். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி தனது முதல் மாநாட்டை நடத்தி இருந்தார். இந்த மாநாட்டில் திமுக கட்சியை கடுமையாக தாக்கி பேசியிருந்தார்.

திமுகவை மட்டும் அல்லாமல் பல கட்சியினரையும் மறைமுகமாகச் சாடி பேசியிருந்தார். இது பலரையும் கோபமடைய செய்திருக்கின்றது. இந்நிலையில் விஜயை தனது தம்பி என்று கூறி வந்த நாம் தமிழர் கட்சியின் தலைவர், ஒருங்கிணைப்பாளர் தற்போது மிகவும் கடுமையாக விமர்சனம் செய்திருக்கின்றார். இது விஜய் ரசிகர்களை மட்டுமல்லாமல் தவெக தொண்டர்களையும் கோபப்படுத்தி இருக்கின்றது.

அதிலும் சமீபத்தில் பேசிய சீமான் லாரியில் அடிபட்டு செத்துப் போவாய் என கூறியிருந்தது விஜய் ரசிகர்களை மிகவும் கோபமடைய செய்திருக்கின்றது. விஜயை மிகக் காட்டமாக விமர்சித்து இருந்தார். இது பஞ்சு டயலாக் இல்லை தம்பி நெஞ்சு டயலாக். நான் குட்டி கதை சொல்பவன் இல்லை தம்பி, வரலாற்றினை கற்பிக்க வந்தவன். எங்கள் லட்சியத்திற்கு எதிராக தகப்பனே வந்தாலும் எதிரி எதிரி தான்.

இதில் அண்ணனும் கிடையாது, தம்பியும் கிடையாது என்று பேசியிருந்தார். மேலும் சீமான் பேச்சுக்கு விஜய் ரசிகர்களும் தொண்டர்களும் மிகுந்த அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். இந்நிலையில் பிரபல விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதள பக்கத்தில் கோவையை சேர்ந்த தவெக தொண்டர் ஒருவர் சீமான் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசி இருப்பதை பகிர்ந்து இருக்கின்றார்.

இது பலரின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது. அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'திமுக Vs த.வெ.க. என்பதை மாற்றி நா.த.க Vs த.வெ.க. எனும் மாயையை உருவாக்குகிறார் சீமான். இளைய சமூகதின் வாக்குகளை மொத்தமாக எங்கள் தளபதி பறித்து கொள்வார் என இவர் அஞ்சுகிறார். இவரைப்பற்றி எங்கள் தலைவர் தவறாக பேசவில்லை. பிறகு ஏன் மாநாடு முடிந்து ஒரு வாரம் ஆகியும் கதறிக்கொண்டு இருக்கிறார்? லாரியில் அடிபடுவாய், கூமுட்டை போன்ற இழிவான தாக்குதல் எதற்கு? தமிழ்நாட்டுக்கு யார் நல்லது செய்தாலும் ஏற்போம்.

முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னி க்விக் படத்தை தங்கள் வீடுகளில் மாட்டிவணங்குவதுதான் தமிழர் பண்பு. அதுபோலத்தான் பெரியாரும். அவர் எந்த ஜாதி, எந்த மாநிலம் என ஆராய தேவையில்லை. பெரியார்தான் எங்கள் கொள்கை தந்தை. எம்.ஜி.ஆர், வி ஜயகாந்த் என யாரையும் மொழி, சாதி, இனம் பார்த்து பிரிக்க மாட்டான் தமிழன். சிலநாட்கள் கழித்து 'என் தம்பியை திட்ட எனக்கு உரிமை இல்லையா?' என பல்டி அடிப்பார்.

இனி எங்கள் தளபதியே சமரசம் ஆனாலும்.. நாங்கள் ஏற்கமாட்டோம். எக்காலத்திலும் சீமானுடன் கூட்டணி வேண்டாம் என தளபதியிடம் வலியுறுத்துவோம். டிசம்பரில்மண்டல வாரியாக தமிழக சுற்றுப்பயணம் செய்து எங்களை சந்திக்க வரும்போதுஇதை நிச்சயம் பேசுவோம் என்று கோவையை சேர்ந்த பாஸ்கரன் கூறியதாக தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார் ப்ளூ சட்டை மாறன்

Next Story