லிடியன் மீது உங்களுக்கு ஏன் காண்டு?!.. திருந்தவே மாட்டீங்க!. இளையராஜாவை பொளந்த பிரபலம்!..

by சிவா |
லிடியன் மீது உங்களுக்கு ஏன் காண்டு?!.. திருந்தவே மாட்டீங்க!. இளையராஜாவை பொளந்த பிரபலம்!..
X

layaraja: இசைஞானி இளையராஜா சமீபத்தில் லண்டன் சென்று அப்போலோ அரங்கில் சிம்பொனி இசையமைத்தார். லண்டன் போகும்போது செய்தியாளர்களிடம் பேசிய இளையராஜா Incredible இந்தியா போல் நான் Incredible இளையராஜா என சொல்லிவிட்டு சென்றார். சிம்பொனியை முடித்துவிட்டு அவர் சென்னை திரும்பிய போது ’நான் இந்தியாவுக்கே பெருமை சேர்த்திருக்கிறேன்’ என சொன்னார்.

இந்நிலையில், இசைத்துறையில் சாதித்து வரும் சிறுவன் லிடியன் நாதஸ்வரமும் விரைவில் சிம்பொனி இசையை அமைக்கவுள்ளதாக அறிவித்திருக்கிறார். லிடியன் நாதஸ்வரம் இளையராஜாவை தனது குருவாக ஏற்றுக்கொண்டவர். மேலும், அவர் ஏற்றுக்கொண்ட ஒரே சிஷ்யன் நான்தான் என்றும் சொன்னவர். ஆனால், இந்த விஷயம் பற்றி இளையராஜா வேறு மாதிரி பதில் சொல்லியிருக்கிறார்.

லிடியன் சிம்பொனி என அவர் வாசித்ததை எனக்கு போட்டு காட்டினார். கொஞ்சம் கேட்டபோதே நிறுத்து.. இது சினிமா பேக்ரவுண்டு மியூசிக் போல இருக்கிறது. சிம்பொனி என்றால் என்னவென கற்றுக்கொண்டு வாசி என சொல்லி அனுப்பி வைத்தேன் என விளக்கமளித்தார். இந்நிலையில், பிரபல யுடியூபர் புளூசட்டமாறன் இளையராஜாவை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

14 வயதிலேயே World's Best Talent போட்டியில் வெற்றிபெற்று உலகப்புகழ் பெற்றவர் லிடியன் நாதஸ்வரம். 2022 ஆம் வருடம் இளையராஜாவை சந்தித்த பிறகு தன்னை அவரது முதல் மற்றும் ஒரே சீடனாக ஏற்றதை மகிழ்ச்சி பொங்க ட்விட்டரில் குறிப்பிட்டார்.

தற்போது திருக்குறளின் 1330 குறள்களுக்கும் பிண்ணனி இசையமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். லிடியன்.இந்த இசைத்தொகுப்பு வெளியானால் தமிழர்களின் புகழ் உலகெங்கிலும் எதிரொலிக்கும்.

பியானோ, ட்ரம்ஸ் உள்ளிட்ட கருவிகளை வாசிக்கும் ஆற்றல் பெற்றவர். ஒரே நேரத்தில் இரண்டு பியானோக்களை வாசித்து உலக அரங்கில் பிரமிப்பை ஏற்படுத்தியவர். இவருக்கு தற்போது வயது 20 மட்டுமே. 80 வயதை தாண்டிய இளையராஜாவிடம் சிம்பொனி இசை குறித்த விளக்கங்களை கேட்டிருக்கிறார். அதில் சிம்பொனி தொடர்பாக தான் செய்த முயற்சியையும் அவரை கேட்க வைத்திருக்கிறார்.

தனது பேரன் வயதுள்ள சிறுவன் மற்றும் ஒரே சிஷ்யன் என்பதால் லிடியனுக்கு இவரே சிம்பொனி பயிற்சி அளித்திருக்க வேண்டும். ஆனால் உனது சிம்பொனி இசை சினிமா பின்னணி இசை போல உள்ளது. சிம்பொனியை முழுமையாக கற்றுக்கொண்டு வா என கூறியுள்ளார். அத்தோடு விட்டாலும் பரவாயில்லை. இதை பொதுவெளியிலும் கூறி லிடியனை சிறுமைப்படுத்துவது பெரிய மனிதனுக்கு அழகா?

திரை இசையில் தன்னை மீறி எவனுமில்லை என்று ஆடியபோது ரஹ்மான் வந்து இவரது கொட்டத்தை அடக்கினார். அப்போது ஆரம்பித்த சரிவு 33 ஆண்டுகள் ஆகியும் மீளவில்லை. தற்போது சிம்பொனியில் தனக்கு போட்டியாக இன்னொரு தமிழன், அதுவும் 20 வயது சிறுவன் வந்துவிடக்கூடாது எனும் எரிச்சல்தான் இவரை இப்படி பேச வைத்திருக்கிறது. திரை இசையில் உங்கள் சகாப்தத்தை வீழ்த்திய ரஹ்மானை போல.. சிம்பொனி, திருக்குறள் பிண்ணனி இசையென தமிழர்களின் புகழை உலகெங்கும் கொண்டு செல்லப்போகும் லிடியனும் வெற்றி பெறுவதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள் ராஜா‌.

நீங்கள் இதுவரை ஒரு இசைக்கலைஞரையும் உருவாக்கியதில்லை‌. ஒரே ஒரே சிறுவன் உங்களை குருவாக ஏற்று வந்தான். அவனுக்கு நீங்கள் அளித்துள்ள கசப்பான பரிசு இதுதான். உங்கள் இசையின் மேன்மையை உங்கள் ஆணவம் தொடர்ந்து கீழே இறக்கி வருகிறது‌. உங்கள் இசையை மட்டுமே மக்கள் விரும்புகிறார்கள். இப்படியான திமிர் பிடித்த பேச்சுகளையோ, பிறரின் வளர்ச்சி கண்டு பொறாமைப்படும் செயல்களையோ அல்ல. எவ்வளவு சொன்னாலும் நீங்கள் திருந்தப் போவது இல்லை..‌ ஏனெனில் எல்லை மீறிய செருக்கும், பொறாமையும் உங்கள் கவச குண்டலங்கள்’ என எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

Next Story