டீ ஏஜிங் பண்ண சொன்னா டூப் போட்டு வச்சிருக்காங்க!.. கோட் 3வது பாடலை கலாய்த்த பிரபலம்..
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் திரைப்படம் கோட். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. தற்போது படத்திற்கான பின்னணி இசை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் கூட இது தொடர்பான புகைப்படத்தை வெங்கட்பிரபு வெளியிட்டார். அதேபோல், தனது ஸ்டுடியோவில் வெங்கட்பிரபு கீழே அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ‘இவங்க தொல்லை தாங்க முடியல’ என்றும் ஃபன் செய்திருந்திருந்தார். விஜய் படம் என்றாலே பாடல்கள் சிறப்பாக இருக்கும்.
அந்த பாடல்களில் அவர் சிறப்பாக நடனமும் ஆடுவார். விஜய் ரசிகர்களும் அதைத்தான் எதிர்பார்ப்பார்கள். கடந்த சில வருடங்களாகவே விஜயின் படங்களுக்கு அனிருத் இசையமைத்து வந்தார். மாஸ்டர், பீஸ்ட், லியோ ஆகிய படங்களுக்கும் அவர்தான் இசையமைத்தார். பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது.
ஆனால் கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டதும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எகிறியது. ஏனெனில், பல வருடங்களுக்கு பின் விஜய்க்கு இசையமைக்கிறார் யுவன். ஆனால், இதுவரை 2 பாடல்கள் வெளிவந்திருக்கிறது. முதல் பாடல் விசில் போடு. அந்த பாடலே ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.
இரண்டாவது ஏஐ டெக்னாலஜி மூலம் பவதாரிணியின் குரலை கொண்டு வந்தனர். இந்த பாடலும் ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை. இந்நிலையில்தான், கோட் படத்தின் மூன்றவது ஸ்பார்க் பாடல் வெளியாகி இருக்கிறது. இந்த பாடலில் விஜயை இளமையாக காட்டுவதற்காக அவரின் முகத்தில் டீ ஏஜிங் செய்திருக்கிறார்கள்.
ஆனால், அது சரியாக ஒர்க் அவுட் ஆகவில்லை. எனவே, இணையத்தில் பலரும் விஜயின் முகத்தை கிண்டலடித்து வருகின்றனர். பிரபல யுடியூப் விமர்சகர் புளூசட்டமாறன் ‘டீ ஏஜிங் பண்ன சொன்னா டோலி சாய் வாலா-வை வச்சி டூப் போட்ருக்காங்கப்பா’ என பதிவிட்டு நக்கலடித்திருக்கிறார்