More
Categories: Cinema News Review

பிச்சைக்காரன் வாந்தி எடுத்த மாதிரி இருக்கு பிளடி பெக்கர்!. பங்கம் செய்த புளூசட்ட மாறன்…

Bloody beggar: இயக்குனர் நெல்சனின் தயாரிப்பில் அவரின் உதவியாளர் சிவபாலன் இயக்கியுள்ள திரைப்படம்தான் பிளடி பெக்கர். இந்த படத்தில் கவின் பிச்சைக்காரனாக நடித்திருக்கிறார். இந்த படம் தீபாவளியை முன்னிட்டு நேற்று காலை வெளியானது. அமரன் சீரியஸான படம் என்பதால் குடும்பத்தோடு ஜாலியாக போய் பார்க்க பிளடி பெக்கர் ஏற்ற படம் என பலரும் சொன்னார்கள். இந்த படமும் ஓரளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த படத்தை விமர்சனம் செய்துள்ள புளூசட்ட மாறன் படம் மோசமாக இருப்பதாக சொல்லி இருக்கிறார். அவர் சொன்னது இதுதான்:

Advertising
Advertising

உழைக்காமல் காசு சம்பாதிக்க ஆசைப்படும் ஹீரோ ஜாலியாக பிச்சை எடுத்து பிழைக்கிறார். இவருக்கு சிறு வயது முதலே ஒரு ஆசை இருக்கிறது. இவர் பார்த்து வைத்திருக்கும் மாளிகை ஒன்றில் ஒரு நாள் தங்கியிருக்க வேண்டும் என்பது அவரின் ஆசையாக இருக்கிறது. அப்படி ஒரு நாள் நடக்க அங்கு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

ஒரு நல்ல கதை அல்லது நல்ல இயக்குனர் எனில் படத்தின் மைய கதாபாத்திரம் என்ன நினைக்கிறதோ அதை படம் பார்ப்பவர்களும் நினைக்க வேண்டும். ஹீரோ அழுதால் நமக்கு அழுகை வரவேண்டும். ஹீரோ சிரித்தால் நமக்கு சிரிப்பு வரவேண்டும். இந்த படத்தின் ஹீரோ அந்த பங்களாவிலிருந்து எப்படியாவது தப்பி போய்விட வேண்டும் என ஆசைப்படுவான். நமக்கும் அதே எண்ணம்தான்.

அதாவது, படத்தை விட்டு ஓடி விட வேண்டும் என்கிற எண்ணம் நமக்கு வருகிறது. அந்தவகையில் இயக்குனர் வெற்றி பெற்றிருக்கிறார். ‘முடிஞ்சா சிரிச்சி பாருங்கடா’ என சவால் விட்டு இப்படத்தை இயக்கி இருக்கிறார்கள். அதிலும் அவர்களுக்கே வெற்றி. ஒரு சீனிலும் சிரிப்பு வரவில்லை. இது காமெடி படமா?. சீரியஸ் படமா?.. கிரைம் திரில்லர் படமா?. ஹாரர் படமா என யோசித்து பைத்தியம் பிடித்துவிட்டது.

பிச்சைக்காரன் வாந்தி எடுத்த மாதிரி ஒரு படத்தை எடுத்து வச்சிருக்காங்க. அதனால்தான் பிளடி பெக்கர் என தலைப்பு வைத்து அதை குறியீடாக வைத்திருக்கிறார்கள் போல. மறுபடியும் டைரக்டர் ஜெயிச்சிட்டாரு. தீபாவளிக்கு ஜாலியாக இருக்கும் என இந்த படத்திற்கு போனால் மொக்கை மொக்கையாக காமெடி செய்து காட்டு மொக்கையாக ஒரு படத்தை எடுத்திருக்கிறார்கள்.

இந்த படத்தை எடுத்தவங்க சரியான பைத்தியம் போல என நினைத்து படம் பார்த்தால் படம் முடியும் போதுதான் இவர்கள் சரியாகாத பைத்தியம் என்பது நமக்கு புரிகிறது. பிளடி பெக்கர்ஸ்..’ என கலாய்த்திருக்கிறார் மாறன்.

Published by
ராம் சுதன்

Recent Posts