ரசிகர்களை சூடாக்கிய பிரபலங்கள்... ரஜினியை மட்டுமல்ல... விஜயகாந்தையும் விட்டு வைக்கலயே..!

சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெய்லர் படத்தின் அறிமுக வீடியோவை டைரக்டர் நெல்சன் வெளியிட்டார். அதுல ரஜினியை பல ஆங்கிள்ல காட்டி கடைசியாத் தான் இது ரஜினின்னு காட்டுவாங்க. மற்றதெல்லாம் டூப்புன்னு சொல்றாங்க. இதுகுறித்து உங்க கருத்து என்னன்னு பிரபல பத்திரிகையாளர் சேகுவாராவிடம் ஆங்கர் கேட்கிறார். அதற்கு அவர் சொன்ன பதில்தான் இது.
வலைப்பேச்சுல உள்ள இந்த 3 பேருக்கும் சினிமா விமர்சனத்தை நெகடிவா பேச ஆரம்பிச்சாங்க. கிட்டத்தட்ட சினிமாவே இவங்க காலடியில இருக்குற பிம்பத்தை உருவாக்குனாங்க. 24 கிராப்டையும் கரைச்சிக் குடிச்ச மாதிரி பேசுனாங்க.
நெகடிவாக பேசுனாங்க: அப்புறம் சினிமா நடிகர், நடிகைகளைப் பற்றி நெகடிவாகவும், கொஞ்சம் பாசிடிவாகவும் பேசுனாங்க. இது பிரின்ட் மீடியாவுல கிசுகிசுன்னு சொல்வாங்க. ஒரு கட்டத்துல தமிழ்சினிமாவே அழிஞ்சி போற மாதிரி பேசுனாங்க. அதுக்கு அடிப்படை காரணம் அவங்ககிட்ட இருக்குற சில ரிட்டயர்டான சினிமா பிஆர்ஓக்கள்.
அவங்களுக்கு சில சிந்தனைகளைக் கொடுத்து சில செய்திகளைக் கசிய விட்டு ஒரு ஆர்வத்தைத் தூண்டுனாங்க. அதனால லட்சக்கணக்கான ரசிகர்களும் பார்க்க ஆரம்பித்து அவங்க சொல்றதுதான் சினிமான்னு நம்பினாங்க. அதை நான் புரிய வைச்சேன்.
பலரும் என்னிடம் உண்மையான விஷயங்களைத்தான் சொல்றாங்கன்னு சொன்னாங்க. இல்ல ரஜினி, விஜய், சிம்பு, சூர்யா, தனுஷ், அஜீத், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என 10க்கும் மேற்பட்ட முன்னணி ரசிகர்களை சூடாக்கி அவர்களுக்குள் மோதலை உருவாக்குற விதத்தில் காணொலிகளைப் போட்டாங்க.
ரியல் சூப்பர்ஸ்டார் விஜய்: அப்பாவி ரசிகர்களையும், இளைஞர்களையும் முட்ட வைத்து பார்வையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்துனாங்க. அடுத்து யோகிபாபு, சூரி, ரஜினியைக் கூட விமர்சனம் பண்ணினாங்க. ரியல் சூப்பர்ஸ்டார் விஜய்தான்னு சொன்னாங்க. விஜயகாந்த் அவரோட கோயம்பேட்டுல அவருக்கு நினைவிடம் வச்சதே தப்பு.
அங்கு வர்றவங்க அவரோட ரசிகர்களோ, பக்தர்களோ இல்லை. சாதாரண மக்கள்தான்னு சொன்னாங்க. அது ஒண்ணும் பெரிய அளவில் வரலன்னாங்க. ஆனா இன்னைக்கு காணும் பொங்கலே கோயம்பேடு ஸ்தம்பித்தது.
விடாமுயற்சி: அஜீத்தின் விடாமுயற்சியைக் காமெடியாகவும், கேலி, கிண்டலா பண்ணினாங்க. அதுக்கு அஜீத்தே யாரிடமும் சண்டை போடாதீங்கன்னு ரசிகர்களிடம் சொன்னார். அதே மாதிரி ரஜினி கூட நல்லவங்களைக் கடவுள் கைவிட மாட்டாரு. கெட்டவங்களுக்கு நிறைய கொடுப்பாரு.
டூப் மாதிரிதான்: ஆனா கைவிட்டுருவாருன்னு சொன்னாரு. ஜெயிலர் 2 படத்துல ரஜினி டூப் தான்னு சொன்னாங்க. அது பேசுபொருளானது. இப்போ சன்பிக்சர்ஸ் மேக்கிங் வீடியோவை வெளியிட்டதும் பயந்துட்டாங்க. நிறைய எதிர்ப்பு வந்துடுச்சு. இப்போ என்ன சொல்றாங்கன்னா நாங்க டூப்புன்னு சொல்லல. டூப் மாதிரிதான்னு சொன்னோம்னு சமாளிச்சாங்களாம். ரஜினி சாரே பர்சனலா வருத்தப்பட்டாராம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.