பராசக்தி டீசர்ல இதென்ன புது குழப்பம்..! பிரபலம் சொல்லும் தகவலைக் கவனிச்சீங்களா?

சிவகார்த்திகேயனுக்கு 25வது படம்... ஜிவி.பிரகாஷ்குமாருக்கு 100வது படம். அதுதான் பராசக்தி. சிவாஜி பட டைட்டில் என்றதும் இது பரபரப்பாக விமர்சனத்துக்கு ஆளானது. படத்தின் டைட்டில் டீசர் நேற்று வெளியானது. இதுகுறித்து பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் என்ன சொல்றாருன்னு பாருங்க.
அச்சம் என்பது மடமையடா: டைட்டில் டீசர்ல எம்ஜிஆரின் அச்சம் என்பது மடமையடா பாடல் வருகிறது. அதை எதிர்பார்க்கவே இல்லை. அது தவிர பராசக்தில சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வான்னு பலர் நடிக்கிறாங்க. அவங்களுக்கான முக்கியத்துவம் எப்படி இருக்கோன்னு நினைச்சேன். ஆனா இந்த புரொமோவுலயே கரெக்டா கொடுத்துருக்காங்க. ரொம்ப சிறப்பா இருந்துச்சு.
சர்ச்சைக்குரிய படம்: அதுதவிர அந்த பீரியட் பிலிம்கான தரம், காஸ்டியூம் எல்லாத்தையும் அந்தக் காலத்துக்குக் கொண்டு போறது சவால். மாணவர் எழுச்சி. பார்த்த உடனே எனக்கு தோணுனது சூர்யா ஒரு நல்ல படத்தை மிஸ் பண்ணிட்டாரேன்னுதான் தோணுச்சு. எனக்கே இப்படி இருக்குன்னா சூர்யாவுக்கு எப்படி இருக்கும்? இது நல்ல படம் என்பதையும் தாண்டி பெரிய சர்ச்சைக்குரிய படமாக மாறும்.
கைகொடுத்த அமரன்: காலத்துக்கேற்ற படமாகவும் இருக்கும். அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு ரொம்ப கைகொடுத்துருக்கு. அவர் பழைய படங்கள்ல இருந்து இதுல நடிக்க வந்துருந்தாருன்னா ஒத்துக் கொள்ள முடியாது. அமரன்ல அவரு நிரூபிச்சிட்டாரு. அப்படிப்பட்ட படத்துல இருந்து இப்படி ஒரு கேரக்டரைப் பண்ணும்போது அது ஈசியா அவருக்கு செட்டாகுது.
எல்லாம் ஏற்க வேண்டியதா இருக்கு. ஜெயம்ரவியின் போக்கு சூப்பர். துப்பாக்கியை அவர் தூக்கின உடனே சமகால படமா இருக்குமான்னு நினைச்சேன். ஏன்னா அந்தத் துப்பாக்கி மட்டும் பழையதாக இல்லாம இப்ப உள்ள ரிவால்வர் மாதிரி இருந்துச்சு.
துப்பாக்கி மட்டும் புதுசா?: 1965ல உள்ள ஜெயம்ரவியாகத் தான் இருக்காரு. ஆனா துப்பாக்கி மட்டும் புதுசா இருக்கு. சிவகார்த்திகேயனோட பெருந்தன்மைதான் ஜெயம் ரவியோட பேரை முதல்ல போடறதுக்குக் காரணம். ஜிவி.பிரகாஷ்சும் எல்லா படத்துலயும் நேர்த்தியான இசையைத் தான் கொடுத்துருக்காரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.