விஜயகாந்துக்கே நடந்துருக்கு... ஏன் பிரதீப் ரங்கநாதனுக்கு நடக்கக்கூடாது? நெருக்கடி கொடுத்தது யார்?

by sankaran v |
விஜயகாந்துக்கே நடந்துருக்கு... ஏன் பிரதீப் ரங்கநாதனுக்கு நடக்கக்கூடாது? நெருக்கடி கொடுத்தது யார்?
X

பிரதீப் ரங்கநாதன் தன்னை அழுத்தப் பார்க்கிறாங்க. செடியில உள்ள இலைகளை எல்லாம் கிள்ளிடுறாங்க. ஆனா வேர் உள்ளுக்குள்ள ஆழமா வளர்ந்துக்கிட்டுத் தான் இருக்குன்னு ஒரு விஷயத்தைச் சொல்லி இருந்தார். இந்த விஷயத்தில் அப்படி யார் செய்றாங்கன்னு கேள்வி எழுந்தது. சிலர் தனுஷ்தான் என்றார்கள். அதற்குப் பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் பதில் சொல்கிறார். வாங்க பார்க்கலாம்.

பலரது சாயல்: தனுஷ் மாதிரி இருக்கிறார். ஆனா பலரது சாயல் இருக்கு. தனுஷ், எஸ்.ஜே.சூர்யா, சிம்பு மாதிரி நடிப்பதாகவும் சொல்கிறார்கள். தனுஷ் தான் இவரை அடக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால் அப்படி ஒரு விஷயத்தை தனுஷ் செய்வாருன்னு சொல்றதை நான் நம்பலை.

தனுஷ் இடத்தைக் கைப்பற்ற முடியாது: தனுஷ் பல தடைகளைத் தாண்டி ஜெயித்தவர்தான். தன்னை நம்பி ஜெயித்தவர். பல மடங்கு அறிவாளியாக மாற்றிக் கொண்டார். மிகச் சரியான இடத்தில் பெண் எடுத்தார். ஆனாலும் அதை வைத்து மட்டும் அவர் புகழ் பெறவில்லை. மேலும் மேலும் தன்னை மெருகேற்றிக் கொண்டார்.

இன்னைக்கு அவரது இடத்தை யாராலும் கைப்பற்ற முடியாது என்ற அளவில்தான் உள்ளது. பிரதீப் ரங்கநாதன் தனுஷ் இடத்தைக் கைப்பற்றி விடுவார். அதனால் தனுஷ் அழுத்தம் கொடுத்தார் என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இலக்கணத்தை உடைத்தவர்: ஆனால் தமிழ்சினிமாவைப் பொருத்தவரை இந்த மாதிரி ஒருவருக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்களா என்றால் அது நடந்துள்ளது. இலக்கணத்தை உடைத்து கருப்பாக இருந்தாலும் ஜெயிக்க முடியும்னு நிரூபித்தவர்தான் ரஜினி. அப்படிப்பட்ட காலகட்டத்தில் தான் விஜயகாந்த் வருகிறார்.

சொந்தக் காலில் நிற்க வேண்டும்: அவருடைய முதல் படம் அனைவராலும் கவனிக்கப்பட்டது. அடுத்தடுத்தப் படங்களிலும் நடிக்கிறார். அன்று அவர் பசியும், பட்டினியோடும் இருந்த காலம். ஊரில் வசதியாக இருந்தாலும் தன் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று விரும்பித்தான் சென்னைக்கு வந்தார்.

அப்போது ஒரு பிரபல தயாரிப்பாளர் பெரிய தொகையைக் கொடுக்கிறார். ஆனால் அது ரஜினி படத்தில் வில்லனாக நடிப்பதற்குக் கொடுக்கப்பட்ட தொகை. அதன்பிறகுதான் தெரிகிறது.

பழிவாங்கும் படலம்: ஆனால் விஜயகாந்தும், இப்ராகிம் ராவுத்தரும் வறுமை காரணமாக செலவு பண்ணிடுறாங்க. தன்னை வில்லனாக்கி விட்டால் அதன்பிறகு நமக்கு அப்படி ஒரு முத்திரையைக் குத்திடுவாங்க. நம்ம மார்க்கெட்டே காலியாகிவிடும் என்ற முடிவுக்கு வந்துடுறாங்க. அதே நேரம் தயாரிப்பாளர் வரும்போது ஒளிய ஆரம்பிக்கிறாங்க. அப்படி ஒரு சூழல் உருவானது. என்ன காரணத்துக்காக விஜயகாந்தை வில்லனாக்க நினைச்சாங்களோ அதுதான் பழிவாங்கும் படலம்.

எந்த பின்புலமும் இல்லாமல்: அதுக்கு அப்புறம் அதுல இருந்து தப்பிச்சி பெரிய அளவில் வந்தார் கேப்டன் விஜயகாந்த். ராவுத்தரும் நல்ல சப்போர்ட் பண்ணினார். ரஜினி வில்லனாக நடித்துள்ளார். ஆனால் அவர் வளர்ந்த சூழல் வேற. அவரை வளர்த்து விட்ட இயக்குனர்கள் வேற. ஆனால் எந்த பின்புலமும் இல்லாமல் வளர்ந்தவர்தான் விஜயகாந்த். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story