எந்த நாய் என்ன வேணாலும் பேசட்டும்... மனநிலை சரியில்லையா..? பிரபலத்தை வறுத்தெடுத்த வெங்கி...!
தமிழகத்தில் மிக பிரபலமான சமையல் கலை நிபுணராக இருப்பவர் வெங்கடேஷ் பட். பல 5 ஸ்டார் ஹோட்டல்களில் chef- ஆக இருந்து வருகின்றார். அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக மிகவும் பிரபலமானார். ஒவ்வொரு சமையலுக்கும் அவர் கொடுக்கும் டிப்ஸும், கமெண்டும் பல ரசிகர்களை அவர் பக்கம் ஈர்த்தது. இதன் காரணமாகவே குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பல சீசன்களாக அவரும் செஃப் தாமுவும் நடுவர்களாக இருந்து வந்தார்கள்.
நடந்து முடிந்த 5-வது சீசனில் தான் வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். பின்னர் சன் டிவியில் விஜய் டிவியை போன்றே டாப் குக்கு டுபுக்கு குக்கு என்கின்ற பெயரில் புது நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டிருந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெங்கடேஷ் பட் வெளியேறியது அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் சமீபத்தில் ரங்கநாதன் வெங்கடேஷ் பட் குறித்து பல விஷயங்களை பகிர்ந்திருந்தார். அதில் அது வெங்கடேஷ் பட் விஜய் டிவி இடம் இருந்து எக்கச்சக்கமான சம்பளங்களை கேட்டிருக்கின்றார். அதற்கு அந்த புரொடக்ஷன் நிறுவனமும், விஜய் டிவியும் ஒப்புக்கொள்ளாத காரணத்தால் தான் அந்த நிகழ்ச்சியில் இருந்து அவர் வெளியேறிவிட்டார். மேலும் போட்டியாக சன் டிவி நிகழ்ச்சியை தொடங்கிய உடனே அங்கு சென்று விட்டார் என்று கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக வெங்கடேஷ் பட் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கின்றார். அந்த வீடியோவில் 'அனைவருக்கும் வணக்கம். முகநூலில் ஒரு விஷயம் நடந்துள்ளது. பயில்வான் ரங்கநாதன் என்கின்ற நபர் என்னை பற்றி அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டு இருக்கின்றார். அந்த வீடியோவுக்கு கீழே அவரை திட்டி பலர் கமெண்ட்ஸ்களை போட்டு வருகிறீர்கள். என் மீது பலர் மதிப்பு வைத்திருக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெரிகின்றது.
தயவுசெய்து அதுபோல் திட்டி கமெண்ட் போட வேண்டாம். அவருடைய நிலைமை என்னவென்று தெரியவில்லை. பணத்துக்காகவோ அல்லது மனநிலை சரியில்லையோ என்று தெரியவில்லை. ஏதோ பிழைப்புக்காக சொல்கின்றார். அவர் அவரது வேலையை செய்யட்டும். அந்த சாணியில் கல் எரிய வேண்டாம். உண்மை இல்லாமல் சொல்லக்கூடிய எந்த விஷயமும் உண்மையாகி விடாது. இதெல்லாம் பொது வாழ்க்கையில் சகஜமான விஷயம் தான்.
ரஜினிகாந்த் சொன்னது போல் யார் என்ன சொன்னாலும் நாம் நமது வழியை பார்த்துக் கொண்டு போக வேண்டும். நம்முடைய வேலையை செய்ய வேண்டும். எல்லோரையும் சிரிக்க வைப்போம், கவலை வேண்டாம். நீங்கள் தலையிட்டு உங்கள் மனதின் நிம்மதியை கெடுத்துக் கொள்ளாதீர்கள். நாம் சூரியனாக இருப்போம் நம்மை பார்த்து எந்த நாய் வேண்டுமானாலும் குறைக்கட்டும்' என்று தெரிவித்திருக்கின்றார்.