விஜய் அரசியலுக்கு பிறகு எல்லாரும் உஷாராயிட்டாங்க போல! புதிய அப்டேட்டை கொடுத்த சீயான் விக்ரம்

by ராம் சுதன் |

தமிழ் சினிமாவில் ஒரு ஸ்டைலிஷான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் சீயான் விக்ரம். தற்போது அவரின் நடிப்பில் தங்கலான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது. படம் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது .அதற்கான புரோமோஷன் வேலைகளில் விக்ரம் இறங்கியிருக்கிறார். அதற்காக முதலில் கேரளா சென்றிருக்கிறார்.

அங்கு ஒரு கடை திறப்பு விழாவிற்கும் விக்ரம் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய விக்ரமிடம் செய்தியாளர்கள் பல கேள்விகளை முன்வைத்தனர். அதில் ஒரு சில பேர் எப்பொழுது மலையாளத்தில் ஒரு படம் பண்ணுவீர்கள்? நாங்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறோம் என்று கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த விக்ரம் ‘ நானும்தான் காத்துக் கொண்டிருக்கிறேன். ஸ்கிரிப்டுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறேன். வேண்டுமென்றால் உங்களுக்கு ஒரு ஹிண்ட் தருகிறேன் என கூறி போன வருடம் மலையாளத்தில் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த ஒரு இயக்குனரிடம் பேச்சுவார்த்தை சென்று கொண்டிருக்கிறது. ஒரு வேளை அது நடக்கலாம். இல்லை நடக்காமல் கூட போகலாம். ஆனால் அது ஒரு பீரியாடிக் மூவியாகத்தான் அமைய இருக்கிறது’ என கூறினார்.

உடனே நம்ம ஆளுங்க சும்மா இருப்பார்களா? போன வருடம் ஹிட்டான மலையாள படம் எது என கூகுளில் செக் பண்ண ஆரம்பித்தனர். அனைவரின் ரிசல்ட்டாக இருந்தது 2018 படத்தை கொடுத்த ஜூட் ஆண்டனி என்ற இயக்குனர்தான். இவரைத்தான் விக்ரம் சொல்லியிருப்பார் என்று இணையத்தில் பரவி வருகின்றனர்.

இன்னும் சில மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குனராக கூட இருக்கலாம் என்று கூறி வந்தனர். ஆனால் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் இந்தாண்டு வெளியான திரைப்படமாகும். எப்படி இருந்தாலும் விக்ரம் கூடிய சீக்கிரம் மலையாள ஆடியன்ஸையும் பிடிக்க ஆரம்பித்துவிடுவார் என்றே தோன்றுகிறது. கேரளா ரசிகர்களை பொறுத்தவரைக்கும் விஜய்க்குதான் அதிகளவு ஃபேன்ஸ் இருக்கிறார்கள்.

இப்போது அவர் அரசியலுக்கு போன பிறகு அந்த இடத்தை யார் நிரப்ப போகிறார்கள்? இல்லை. விஜய் இடத்தை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் கூட அடுத்து வரும் நடிகர்கள் புது யுத்திகளை கையாலளாம் என்றே தெரிகிறது.

Next Story