இளையராஜாவை எவனாவது திட்டினா சேரை தூக்கி அடிப்பேன்!.. பொங்கிய பிரபல இசையமைப்பாளர்!..

Ilayaraja: தமிழ் சினிமாவை காக்கும் கடவுளாக பார்க்கப்பட்டவரும், தனது பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவரும் இளையராஜா எனில் கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளானவரும் அவர்தான். சின்ன விஷயங்களை சாதித்தாலே பலருக்கும் கர்வம் வருகிறது.
ஆனால், இளையராஜா எவ்வளவோ சாதனைகளை செய்தவர். அவரை போல மிகவும் வேகமாக இசையமைக்கும் இசையமைப்பாளர் இந்த உலகிலேயே இல்லை. நாம் இப்போதும் ரசிக்கும் பல படங்களின் பாடல்களை அவர் அரைமணி நேரம் முதல் 2 மணி நேரங்களில் உருவாக்கினார். சின்னக்கவுண்டர், சின்னத்தம்பி, குணா என சொல்லிக்கொண்டே போகலாம்.
இளையராஜா பாடல்கள்: சின்னத்தம்பி படத்திற்கு 45 நிமிடங்களில் 9 பாடல்களை போட்டு கொடுத்தாராம். அவரின் இசை ரசிகர்களின் மனதோடு பேசுகிறது. பலரின் மனக்காயங்களுக்கு மருந்து போடுகிறது. பலரின் பயணங்களில் வழித்துணையாக வருகிறது. மனதுக்கு இதமான உறவாக இளையராஜா பாடல்கள் இருக்கிறது.
இளையராஜாவின் கோபம்: அப்படிப்பட்ட இளையராஜாவுக்கு கர்வம் இருந்தால் தப்பென்ன என்பதுதான் கேள்வி. நியாயமான விஷயங்களுக்கு அவர் கோபப்படுகிறார். அவரை அவமானப்படுத்தும் விதமாக யாராவது நடந்துகொண்டால் அதை தாங்க முடியாமல் அவர் கண்டிக்கிறார். இது பலருக்கும் புரியவதில்லை. ஆன்மிகத்தில் நான் இருப்பதால் என் மீதான விமர்சனங்களை நான் கண்டுகொள்வதில்லை.
நான் கர்வம் பிடித்தவன், திமிர் பிடித்தவன் என சொல்கிறார்கள். எவனும் செய்யாத விஷயங்களை நான் செய்திருக்கிறேன். எனக்குதான் கர்வம் இருக்கணும். எனக்குதான் திமிறு இருக்கணும். ஆனால், என்னிடம் திமிறே இல்லை. எனக்கு திமிரு இருக்குன்னு சொல்பவனுக்கு எவ்வளவு திமிரு இருக்கணும் என கேள்வி எழுப்பியிருந்தார் இளையராஜா.
தேவிஸ்ரீ பிரசாத்: இந்நிலையில், புஷ்பா பட இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘இளையராஜா சார் பற்றி யாராவது தப்பாக பேசினால் ச்சேரை தூக்கி அடிப்பேன். அவர் தமிழுக்கு மட்டுமல்ல. உலக சினிமாவுக்கே பெருமை. அவரை பற்றி தப்பாக பேச யாருக்கும் இங்கே தங்குதியில்லை’ என பொங்கியிருக்கிறார்.