மஞ்சுளா செஞ்ச விஷயம்.. எனக்காக அவர் மனைவி கிட்ட சண்டை போட்டாரு.. மனம் திறந்த சேரன்!..
தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் சேரன். நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சினிமாவிற்கு நுழைந்த இவர் உதவி இயக்குனராக சில காலம் பணி புரிந்தார். அதன் பிறகு தான் ஒரு வெற்றி இயக்குனராக மாறினார். இவர் கே.எஸ் ரவிகுமாரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார். பொதுவாக கேஸ் ரவிக்குமார்களும் சேரனுக்கும் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இருவரும் சண்டை போட்டுக் கொள்வார்கள்.
பின்னர் மீண்டும் சேர்ந்து கொள்வார்கள். இதையே ஒரு வேலையாக வைத்திருக்கின்றார். சேரன் அதன் பிறகு 2000 ஆண்டு வெற்றி கொடி கட்டு என்கின்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். இவர் இயக்கிய ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து போன்ற திரைப்படங்கள் தேசிய விருதுகளை பெற்றது. பின்னர் தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களை இயக்கிய இவர் பல படங்களில் நடித்தும் இருந்தார்.
கே.எஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய போது இவருக்கும் நடிகை மஞ்சுளாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு குறித்து பேசி இருக்கின்றார். கேஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ஆர் பி சவுத்ரி தயாரிப்பில் 1991 ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் சேரன் பாண்டியன். இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றெடுத்தது.
இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. கிராமத்துக் கதையை பின்னணியில் வைத்து எடுக்கப்பட்ட படத்தில் சேரன் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். அப்போது மஞ்சுளா விஜயகுமாரின் காட்சிகள் படமாக்கப்பட்டது. காலை காட்சி என்பதால் மஞ்சுளாவும் எப்போதும் போல் தயாராகி வந்திருக்கின்றார். அவரை பார்த்தவுடன் சேரனுக்கு ஒரே அதிர்ச்சையானது.
விடியற்காலையில் மஞ்சள் நிற புடவையில் அவ்வளவு நகைகளை போட்டு கொண்டை நிறைய பூ வைத்து ஒரு அம்மன் சிலையை போல் வந்து நிற்கின்றார். இதை பார்த்துச் சேரன் இவ்வளவு மேக்கப் வேண்டாம் என்று கூறி இருக்கின்றார். ஆனால் மஞ்சுளாவுக்கு அதில் உடன்பாடு இல்லை. நான் இப்படி தான் நடிப்பேன் என்று கூறி அவரிடம் வாக்குவாதம் செய்து இருக்கின்றார். பின்னர் இயக்குனரும் வந்து பார்த்துவிட்டு ஒரே அதிர்ச்சி அடைந்திருக்கின்றார்.
வேறு என்ன செய்வது மஞ்சுளா கேட்க மாட்டேங்கிறாரே என்று கூறிவிட்டு அப்படியே அந்த படத்தின் காட்சிகளை எடுத்து முடித்து இருக்கிறார்கள். படம் வெளியாவதற்கு முன்பு படத்தை அனைவரும் அமர்ந்து பார்த்திருக்கிறார்கள். அப்போது படத்தில் மற்ற கதாபாத்திரங்களை ஒப்பிடும்போது மஞ்சுளாவுக்கு அதிகம் மேக்கப் இருப்பது போன்று தோன்றியிருக்கின்றது. அதன் பிறகு சேரனிடம் சென்று நீங்கள் சொன்னது சரிதான் என்னை மன்னித்து விடுங்கள்.
மற்றவர்களை காட்டிலும் நான் வித்தியாசமாக இந்த படத்தில் தெரிகின்றேன் என்று கூறியிருக்கின்றார். இதை கேள்விப்பட்ட விஜயகுமாரும் அவருக்கு தெரியாதா? அவர் சொன்னால் கொஞ்சமாவது புரிந்து கொள்ள வேண்டும். உதவி இயக்குனர் என்று அலட்சியப்படுத்தக் கூடாது. உதவி இயக்குனருக்கு தெரியாது உனக்கு தெரிந்து விடுமா? என்று சத்தம் போட்டு இருக்கின்றார். இந்த நிகழ்வை இயக்குனர் சேரன் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கின்றார்.