அஜித்துக்கு அமைஞ்ச மாதிரி ரசிகர்கள் அமையறது பெரிய விஷயம்! அப்படி என்ன செஞ்சிட்டாங்க?

by sankaran v |
அஜித்துக்கு அமைஞ்ச மாதிரி ரசிகர்கள் அமையறது பெரிய விஷயம்! அப்படி என்ன செஞ்சிட்டாங்க?
X

தமிழ்த்திரை உலகில் எந்தவித பின்புலமும் இல்லாமல் தன்னோட திறமை ஒன்றையே மூலதனமாகக் கொண்டு முன்னேறிய நடிகர்கள் பலர் உண்டு. அவர்களில் ஒருவர் தான் ரசிகர்களால் 'தல' என்று போற்றப்படும் அஜீத்குமார்.

இவர் தற்போது என்னை யாரும் 'தல' என்றோ 'அல்டிமேட்', 'கடவுளே' என்றோ அழைக்க வேண்டாம். எனக்கு எந்தப் பட்டமும் தேவையில்லை. 'ஏகே', 'அஜீத்குமார்' என்று அழைத்தால் போதும் என்று அறிவித்தார்.

கமலும், நயன்தாராவும்: அவரைத் தொடர்ந்து கமலும், நயன்தாராவும் அறிவித்து இருப்பது ஆச்சரியம். ஏன்னா கமல் அவரை விட முன்னாடி இருந்தே சினிமாவில் இருக்கிறார். இருந்தாலும் இந்த விஷயத்தில் அஜீத் அவருக்கெல்லாம் முன்னோடியாக இருந்துள்ளார்.

லிங்குசாமியின் இயக்கத்தில் ஜி படத்தில் அஜீத்குமார் நடித்துள்ளார். அவர் அந்தப் படத்தில் டை போட்டு ஸ்மார்ட்டாக நடித்து இருந்தார். அஜீத்தைப் பொருத்தவரை பல படங்களில் உடை விஷயத்தில் கவனம் செலுத்துவார். அவரது உடை நேர்த்தியாக இருக்கும். பார்ப்பதற்கே ஒரு கெத்தாக இருக்கும்.

அஜீத் ரசிகர்கள்: பில்லா படத்தில் அவருடைய லுக்கே வேற லெவல்ல இருந்தது. இது ரசிகர்களின் எண்ணிக்கையை பெரிய அளவில் அதிகரிக்கச் செய்தது. அவரது ரசிகர்கள் பற்றியும் அஜீத் குறித்தும் இயக்குனர் லிங்குசாமி ஆச்சரியமாக ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.

தெலுங்குல பவன் கல்யாண் மாதிரி இங்க அஜீத்துக்கு ஒரு ஃபேன் பேஸ் இருக்கு. என்னமோ தெரியல. அப்படி வந்து நிப்பாங்க. உசுரே கொடுத்துடுவாங்க. அப்படி ரசிகர்கள் அமைவது எல்லாம் ரொம்ப பெரிய விஷயம்.

டை கட்டிய ஆபீஸர்: இத்தனைக்கும் விக்ரம் சார் மாதிரியும், சூர்யா சார் மாதிரியும் அவர் முழுக்க முழுக்க சினிமாவில் கிடப்பது கிடையாது. சினிமாவை அவர் ஒரு ப்ரொபஃனா தான் பார்க்கிறார். டை கட்டிக்கிட்டு ஆபீஸர் மாதிரி வந்து நடிச்சிட்டு போவாரு. ஆனால், கொடுத்த வேலையை சரியாக செஞ்சிடுவாரு என்கிறார் இயக்குனர் லிங்குசாமி.

Next Story