ஷங்கரோட இந்தப் படங்கள் எல்லாம் காப்பியா? இப்பத்தானே தெரியுது..!

by சிவா |
ஷங்கரோட இந்தப் படங்கள் எல்லாம் காப்பியா? இப்பத்தானே தெரியுது..!
X

Gentleman

ஷங்கரோட எல்லா படமும் காப்பிதான். திரைக்கதையில் டோட்டலாகவே மாற்றி இருப்பார். அதை நம்பவே முடியாது என்கிறார் சினிமா விமர்சகர் சிவபாலன். வேறு என்னவெல்லாம் சொல்கிறார்னு பார்க்கலாமா...

இன்ஸ்பிரேஷன்னா ஒரு படத்தில் உள்ள ஒரு விஷயத்தால் ஈர்க்கப்பட்டு அதே மாதிரி பண்ணாம சொந்தமா ஒரு கதையை ரெடி பண்றதுதான். பாலாவோட பிதாமகன் படத்துல சுடுகாட்டுக்கு வரும் விக்ரமின் கேரக்டர் நந்தவனத்தில் ஒரு ஆண்டி என்ற ஜெயகாந்தனின் சிறுகதைக்குப் பொருந்தும். அது கூட ஒரு மலையாளப்படத்தையும் இன்ஸ்பையர் ஆக்கிடுறாரு.

மௌனராகம்: அதே போல கஜினி படத்துல வர்ற ஷார்ட் டர்ம் மெமரி லாஸ். இது இன்ஸ்பிரேஷன் பண்ணி எடுத்தது அப்பட்டமான பொய். இது அடாப்டேஷன். அப்படியே எடுத்து காப்பி அடிச்சி நம்ம ஊருக்கு ஏற்ற மாதிரி பட்டி டிங்கரிங் பார்க்குறது. அட்லி எடுத்த ராஜா ராணி படம் மௌனராகம் படம்தான். ஆனா யாருமே சொல்லமாட்டாங்க. பருவராகமும், நெஞ்சத்தைக் கிள்ளாதே படமும் ஒரே லைன். அது எடுக்கப்பட்ட விதம்தான் காரணம்.

விக்ரமனோட வானத்தைப் போலவும், லிங்குசாமியின் ஆனந்தமும் ஒரே கதைதான். எல்லாமே ஒரே பேட்டர்ன்தான். இதுல சினிமாத்தனம் இருக்கும். விக்ரமன் படத்துல யதார்த்தம் இருக்கும். ஷங்கரோட பெரும்பாலான படங்கள் காப்பிகேட் தான். ஜென்டில்மேன்ல படிக்க வைக்கணும்னு நினைக்கிற திருடன்.

குரு டூ ஜென்டில்மேன்: இது மாதிரி கதை கமல், ஸ்ரீதேவி, முத்துராமன் நடித்த குரு படம்தான். குரு திருடன். நல்லது பண்றவன். குழந்தைகளைப் படிக்க வைக்கிறான். இதே பேட்டர்ன்தான் ஜென்டில்மேன். ஷங்கரைப் பொருத்தவரை அழுத்தமான பிளாஷ்பேக் வச்சிருப்பாரு. அந்தக் கதையை இதுல இருந்து காப்பி அடிச்சித்தான் எடுத்துருக்காரு என்ற சூழலே இல்லாம அமைச்சிருப்பாரு.

காதலன்: முதல்ல எஸ்ஏசி, பவித்ரன் சாருக்கிட்ட அசிஸ்டண்ட்டா இருந்தாரு. காதலன் படம்தான் ஷங்கரோட அடுத்த படம். பவித்ரன் சாரோட படம் தான் வசந்தகால பறவைகள். அதுல போலீஸ் ஸ்டேஷன்ல கொடுமைப்படுத்துற காட்சி. இதை இன்ஸ்பயர் பண்ணித்தான் காதலன் படம்.

தங்கப்பதக்கம் தான் இந்தியன்: இந்தியன் தான் ஹைலைட்டான விஷயம். நேர்மையா இருக்குற அப்பா. நேர்மைன்னா என்னன்னே தெரியாத பையன். குறுக்குவழியில ஜெயிக்கணும்னு நினைக்கிறான். அப்பா நேர்மை தான் ஜெயிக்கும்னு சொல்றாரு. இதுல எது ஜெயிக்குது? தமிழ்சினிமாவே பிரமிச்ச படம் தங்கப்பதக்கம். அதுல சிவாஜி சாரோட கம்பீரம். அவரு பையன் திருடனாவே மாறுவாரு. கடைசில துப்பாக்கியை வச்சி சுட்டுப் பிடிப்பாரு. அதே மாதிரிதான் இந்தியன். இதுல கமல் சார் பையனை கத்தியால ஏர்போர்ட்ல குத்துவாரு. சேம் பேட்டர்ன்தான்.

ஹவுஸ்புல்: பார்த்திபனே காப்பி அடிச்சி இருக்காரு. ஆனா யாருக்குமே தெரியாது. அவரோட ஹவுஸ்புல். இதுல தியேட்டர்ல பாம் வச்சிருப்பாங்க. அதே மாதிரி டைட்டானிக் படத்துல கப்பல் கவுற போகுது. இரண்டு படத்துலயும் ஒவ்வொருவரையா காப்பாற்ற வெளியேற்றுவாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story