லைக்காவுக்கே தண்ணி காட்டிய ஷங்கர்!.. சொன்னத செஞ்சிருந்தா இந்தியன் 2 தப்பிச்சிருக்கும்!..

0
426
shankar

பொதுவாக பெரிய இயக்குனர்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. முழுக்கதையை தயாரிப்பாளரிடம் சொல்ல மாட்டார்கள். சில இயக்குனர்கள் ஒரு வரியில் கூட கதை சொல்ல மாட்டார்கள். அதேபோல், படத்தின் பட்ஜெட்டை கூட குத்து மதிப்பாகவே சொல்வார்கள். சொன்ன பட்ஜெட்டை தாண்டி பல கோடிகள் செலவானாலும் பதட்டப்பட மாட்டார்கள். அதேபோல், இந்த தேதிக்குள் முடித்து தருகிறேன் என சொல்லவும் மாட்டர்கள்.

இயக்குனர் படத்தை எப்போது முடிப்பார்?.. செலவு இன்னும் இழுக்குமா?.. திட்டமிட்ட தேதியில் படத்தை வெளியிட முடியுமா? என எதுவும் தெரியாமல் தயாரிப்பாளர்கள் காத்து கிடப்பார்கள்.. பெரிய இயக்குனர்களிடம் தயாரிப்பாளர் கோபப்படவும் முடியாது. ஏனெனில், பெரிய நடிகர்கள் பெரிய இயக்குனர்களின் இயக்கத்தில்தான் நடிக்க ஆசைப்படுவார்கள்.

நடிகர்களின் கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்களும் இயக்குனர்களை பொறுத்துக்கொள்வார்கள். இது தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நடக்கும் கதைதான். இதில், இயக்குனர் ஷங்கரும் ஒருவர். துவக்கம் முதலே அதிக பட்ஜெட்டுகளில் படமெடுத்து பழக்கப்பட்டவர். இப்போது இவரே நினைத்தாலும் குறைவான பட்ஜெட்டில் படமெடுக்க முடியாது.

இந்தியன் 2 படத்தையும் இப்படித்தான் எடுத்தார் ஷங்கர். இப்படத்தின் பட்ஜெட் 300 கோடி என சொல்லப்படுகிறது. லைக்காவிடம் முழு கதையை ஷங்கர் சொல்லவில்லை. பட்ஜெட்டும் இழுத்துக்கொண்டே போனது. ரிலீஸ் தேதியும் மாறிக்கொண்டே போனது. இப்போது ஒருவழியாக படம் முடிந்து வெளியாகி ரசிகர்களை கவரவில்லை.

படம் போரடிக்கிறது.. 3 மணி நேரம் ஓடுகிறது.. காட்சிகளில் பெரிய சுவாரஸ்யம் இல்லை என பலரும் சொல்கிறார்கள். படத்தை முடித்தவுடன் போட்டு காட்டுங்கள் என லைக்கா நிறுவனம் சொல்லி இருக்கிறது. ஆனால், ஷங்கர் அதை செய்யவில்லை. அதேபோல், கமல், அனிருத் உள்ளிட்ட சிலரும் படத்தில் லேக் இருக்கிறது என சொல்லி இருக்கிறார்கள்.

ஆனால், ஷங்கர் எதையும் செய்யவில்லை. 30 நிமிட காட்சிகளை வெட்டினால் மட்டுமே படம் ஓரளவுக்கு தேறும் என்கிற நிலையில் இப்போது 11 நிமிட காட்சிகளை மட்டுமே வெட்ட சம்மதித்திருக்கிறார் ஷங்கர். இதனால் எந்த பிரயோஜனமும் இல்லை என்பது ஷங்கருக்கு புரியவில்லை. முன்பே லைக்கா நிறுவனத்துக்கு படத்தை போட்டு காட்டி இருந்தால் 30 நிமிட் காட்சிகளை அவர்கள் வெட்ட சொல்லியிருப்பார்கள். ஆனால், ஷங்கர் அதை செய்திருக்க மாட்டார் என்பதே உண்மை. இப்போது கெட்டப்பெயர் ஷங்கருக்கு. நஷ்டம் லைக்காவுக்கு என்பதே நிலைமை.

google news