அவர நடிக்க வச்சா வடிவேலு ஏழரையை இழுப்பாரு!.. சிக்கி தவிக்கும் சுந்தர் சி...
நடிகர் வடிவேலுவை சிரிக்க வைக்கும் ஒரு காமெடி நடிகராக மட்டுமே ரசிகர்களுக்கு தெரியும். ஆனால், அவரின் உண்மையான குணம், அவருக்குள் இருக்கும் பொறாமை, வன்மம், குரூரம் போன்றவை அவரை வைத்து படமெடுத்த இயக்குனர்கள் மற்றும் அவருடன் நடித்த காமெடி நடிகர்களுக்கு மட்டுமே தெரியும்.
வடிவேல் யாரையும் வளரவிட மாட்டார். தன்னுடன் நடிக்கும் போண்டா மணி, பாவா லட்சுமணன், அல்வா வாசு போன்ற நடிகர்களுக்கு மிகவும் குறைவான சம்பளத்தை வாங்கி கொடுப்பார். தயாரிப்பாளர் 10 ஆயிரம் கொடுக்க வந்தாலும் அதை தடுத்து ‘அவனுங்களுக்கு 2 ஆயிரம் கொடுங்க போதும்’ என சொல்லும் உயர்ந்த குணம் கொண்டவர்தான் வடிவேலு.
காலை 7 மணிக்கு வார சொன்னால் 11 மணிக்கு வருவார். 4 மணிக்கெல்லாம் கிளம்பி போய் விடுவார். இத்தனைக்கும் மிகவும் அதிக சம்பளம் வாங்குபவர் வடிவேலு. தன்னுடன் நடிக்கும் காமெடி நடிகர்களை மிகவும் கேவலமாக நடத்துவார். யாருக்கும் எந்த உதவியும் செய்யமாட்டார்.
போண்டா மணி, அல்வா வாசு, பாவா லட்சுமணன் போன்றவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த போது ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை வடிவேலு. ஆரம்பத்தில் வாய்ப்பு கேட்டு இயக்குனர்களிடமும், தயாரிப்பாளர்களிடம் கெஞ்சிய வடிவேலு அவர் வளர்ந்த பின் யாரையும் வளரவிட வில்லை.
குறிப்பாக அவர் நடிக்கும் படங்களில் மற்றொரு காமெடி நடிகர் நடிப்பதை அவர் விரும்பமாட்டார். அப்படி நடிக்க வைத்தால் அவ்வளவுதான். ஒருமுறை சுந்தர்.சி சந்தானத்தை சில படங்களில் நடிக்க வைத்தார். இதனால் ஏற்பட்ட கோபத்தில் ஒரு படத்தில் வடிவேல் கொடுத்த குடைச்சலில் சுந்தர்.சி மன உளைச்சலுக்கு ஆளான சம்பவமெல்லாம் நடந்தது.
தற்போது சுந்தர்.சி இயக்கி நடிக்கும் ஒரு புதிய படத்தில் வடிவேலுவும் நடித்து வருகிறார். சுந்தர் சிக்கு யோகி பாபுவை பிடிக்கும் என்பதால் அவரையும் இப்படத்தில் நடிக்க வைக்கலாம் என நினைக்கிறாராம். அதேநேரம், ‘வடிவேலுவுக்கு இது பிடிக்காது. என்ன குடைச்சல் கொடுப்பாரோ’ எனவும் யோசித்து வருகிறாராம்.