இவங்கள வச்சு படம் பண்ண சினிமாவுக்கு வரல!.. இப்படி ஒப்பான சொல்லிட்டாரே சுசீந்திரன்..!

by ramya suresh |
இவங்கள வச்சு படம் பண்ண சினிமாவுக்கு வரல!.. இப்படி ஒப்பான சொல்லிட்டாரே சுசீந்திரன்..!
X

இயக்குனர் சுசீந்திரன்: தமிழ் சினிமாவில் நான் மகான் அல்ல, வெண்ணிலா கபடி குழு, அழகர்சாமியின் குதிரை, ராஜபாட்டை, ஆதலால் காதல் செய்வீர், பாயும் புலி, வில்லு அம்பு, மாவீரன் கிட்டு, ஈஸ்வரன் உள்ளிட்ட ஏகப்பட்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் சுசீந்திரன். பல தோல்வி படங்கள் வந்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களை இயக்கி வருகின்றார். அந்த வகையில் தற்போது 2கே லவ் ஸ்டோரி என்கிற திரைப்படத்தை இயக்கியிருக்கின்றார்.

2கே லவ் ஸ்டோரி: இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஜெகவீர் என்பவர் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கும் திரைப்படம் தான் 2கே லவ் ஸ்டோரி. இந்த திரைப்படத்தில் மீனாட்சி கோவிந்தன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் பால சரவணன், ஜெயபிரகாஷ், வினோதினி உள்ளிடப் பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கின்றது. படம் வெளியாவதற்கு இன்னும் சிறிது நாட்களே இருப்பதால் தொடர்ந்து படத்தின் புரமோஷன் வேலைகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சுசீந்திரன் படம் குறித்து பல்வேறு விஷயங்களை பேசியிருந்தார். மனதிற்குள் காதல் வருவதற்கு முன்பு காமம் வருவது தான் மனிதனின் இயல்பு. ஆதாம் ஏவால் காலத்தில் இருந்து இதுதான் நடந்து வருகின்றது என்று படத்தின் ஒன் லைன் ஸ்டோரியை பேசி இருந்தார். இந்த திரைப்படம் இன்றைய கால இளைஞர்களுக்கு நிச்சயம் ஏற்ற திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் சுசீந்திரன் பேட்டி: தொடர்ந்து பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வரும் சுசீந்திரன் சினிமாவில் பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்குவது குறித்து பேசி இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது: 'புது முகங்களை வைத்து ஏன் படம் செய்கிறீர்கள். பெரிய படமாக செய்யுங்கள். அஜித், விஜய் உள்ளிட்ட நடிகர்களை வைத்து படம் செய்யுங்கள் என்று என்னிடம் கூறுவார்கள்.

அது எல்லா இயக்குனர்களுக்கும் இருக்கும் கனவு தான். நான் சினிமா பண்ணனும்னு தான் இந்த துறைக்கு வந்தேன். ரஜினி சார், கமல் சார், அஜித், விஜய் வைத்து படம் செய்ய வரவில்லை. நான் சினிமாவில் இருக்கணும். அந்த சினிமா எண்டர்டைன்மென்டாக இருக்க வேண்டும். நிச்சயம் ஒரு 5 கோடி பட்ஜெட்டில் படம் எடுத்து 100 கோடி வசூல் செய்கிற அளவுக்கு ஒரு படத்தை செய்வேன். அது தான் சரியான பாதை என்று நம்புகின்றேன்' என இயக்குனர் சுசீந்திரன் கூறியிருந்தார். இந்த பேட்டியானது தற்போது வைரலாகி வருகின்றது.

Next Story