சிம்புவுக்கு அந்தக் கதை பண்ணல... ஜெய்க்குப் பண்ணியது... அதான் காரித் துப்பிட்டாங்களா?

by sankaran v |
சிம்புவுக்கு அந்தக் கதை பண்ணல... ஜெய்க்குப் பண்ணியது... அதான் காரித் துப்பிட்டாங்களா?
X

இயக்குனர் சுசீந்திரன் சிம்பு நடித்த ஈஸ்வரன் படம் ஏன் பிளாப் ஆனது என்பது குறித்து இப்போது வாய் திறந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.

10 படங்கள் பிளாப்: சுசீந்திரன் எடுத்த முதல் படமே சூப்பர்ஹிட். வெண்ணிலா கபடி குழு. 2009ல் வெளியானது. அழகர்சாமியின் குதிரை, பாண்டிய நாடு, பாயும்புலி என சில சூப்பர்ஹிட் படங்களை இவர்தான் இயக்கியுள்ளார். அந்தவகையில் இயக்குனர் சுசீந்திரன் பல சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்தவர். ஆனால் தொடர்ந்து 10 படங்கள் பிளாப் கொடுத்து விட்டார்.

500 கோடிக்கு வசூல்: இவர் இப்போது ஞானோதயம் வந்தவராக ஒரு பேட்டி கொடுத்து இருந்தார். அதாவது விஜயை வைத்து 300 கோடி பட்ஜெட் போட்டு படம் எடுத்து அதை 500 கோடிக்கு வசூல் செய்வது பெரிய விஷயம் அல்ல. 5 கோடி பட்ஜெட்ல படம் எடுத்து அதை 500 கோடிக்கு வசூல் செய்யணும் அப்படின்னார். இந்த பேச்சு சர்ச்சையானது. அவரு அப்படி ஏதாவது படம் எடுத்துருக்காரான்னு எல்லாம் கேட்டாங்க.

ஈஸ்வரன்: அவரு எடுக்கலாம் இல்ல. அவரோட ஆசை அது. ஆனா அவரு நல்ல கதை அமைஞ்சா நானும் அப்படிப்பட்ட படங்களை எடுத்துக் காட்டுவேன்னு சொல்றாரு. இவர் இயக்கத்தில் சிம்பு நடித்த ஈஸ்வரன் படம் 2021ல் வெளியானது. சிம்புவுடன் இணைந்து பாரதிராஜா, நிதி அகர்வால், நந்திதா உள்பட பலர் நடித்துள்ளனர். தமன் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. இதற்கு இயக்குனர் சுசீந்திரன் சொன்ன காரணம் இதுதான்.

ஜெய்க்கு எழுதுன கதை: ஈஸ்வரன் படம் ஜெய்க்கு எழுதுன கதை. அதைக் கொஞ்சம் ஆல்டர் பண்ணி சிம்புவுக்கு பொருத்;திடலாம்னு பார்த்தேன். பொருந்தல. காரி துப்பிட்டாங்க. மாநாடு படம் முடிச்சிட்டு 23 நாள்ல ஒரு படம் எடுக்கணும்னு கால்ஷீட் கொடுத்தார். 23 நாள்ல அந்த மாதிரி படம்தான் எடுக்க முடியும் என்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.

Next Story