ஒன்னு இல்ல..ரெண்டு இல்ல! 16 லட்சம்.. பண்ண தப்புக்காக மன்னிப்பு கேட்ட விக்ரமன்.. இப்படிலாம் நடந்ததா?

by ராம் சுதன் |

தமிழ் சினிமாவில் செண்டிமெண்ட் கலந்த படங்களை கொடுப்பதில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக இருந்தவர் விக்ரமன். இன்று மாபெரும் பெரிய நடிகர்களாக இருக்கும் நடிகர்களின் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திய படங்களை கொடுத்ததில் இயக்குனர் விக்ரமனுக்கும் ஒரு பெரும் பங்கு உண்டு. விஜயை குடும்ப ஆடியன்ஸ்கள் கொண்டாடுவதற்கு காரணமாக அமைந்த படம் பூவே உனக்காக.

அந்தப் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக மாறினார் விக்ரமன். அதே போல் கார்த்திக்கு பல வெற்றிப்படங்களை கொடுத்தவரும் விக்ரமன்தான். இந்த நிலையில் இயக்குனர் விக்ரமன் பற்றி பிரபல சினிமா தயாரிப்பாளர் கலைபுலி எஸ். தாணு சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

அதாவது தாணுவிடம் ஒரு நாள் இரு நண்பர்கள் பற்றிய ஒரு கதையை விக்ரமன் சொல்லியிருக்கிறார். அந்த கதையை எடுத்திருந்தால் கண்டிப்பாக பெரிய அளவில் வசூலை அள்ளியிருக்கலாம் என தாணு கூறினார். ஆனால் விக்ரமன் அந்த கதையோடு இன்னொரு கதையை கூறி ‘இதில் இளைஞர்களுக்கான ஒரு புது விஷயத்தை நான் பண்ண இருப்பதாகவும் முழுக்க முழுக்க என்னோட ஐடியாவிலேயே படம் இருக்கும்’ என்றும் கூறி சென்னைக் காதல் படத்தின் கதையை கூறியிருக்கிறார்.

ஆனால் தாணுவுக்கு அதில் ஆர்வமே இல்லையாம். இருந்தாலும் தாணு ‘உனக்காக இந்தப் படத்தை எடுக்கிறேன்’ என கூறி படத்தை தயாரித்திருக்கிறார். ஆனால் படம் பெரும் தோல்வியை தழுவியிருக்கிறது. படம் ரிலீஸ் ஆகி விக்ரமனுக்கு கொடுக்க வேண்டிய சம்பளம் 16 லட்சத்தை எடுத்துக் கொண்டு தாணு அவரை பார்க்க சென்றிருக்கிறார்.

ஆனால் விக்ரமனோ அந்த பணத்தை வாங்கவில்லையாம். அதுமட்டுமில்லாமல் ‘இது என்னோட தவறு. என் பேச்சை கேட்டு எனக்காக இந்தப் படத்தை எடுக்க முன்வந்தீர்கள். அதனால் சம்பளம் வேண்டாம்’ என சொல்லி வாங்க மறுத்தாராம் விக்ரமன்.

Next Story