ரஜினிக்கு இப்படி ஒரு ஞாபகசக்தியா? அசந்து போன நடிகர்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் பல படங்களில் நடித்த அனுபவம் குறித்து பிரபல நடிகர் அச்சமில்லை கோபி தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.
படிக்காத பண்ணையார்: அச்சமில்லை கோபி சிவாஜியுடன் படிக்காத பண்ணையார் படத்தில் நடித்துள்ளார். ரஜினியுடன் வேலைக்காரன் படத்தில் நடித்துள்ளார். எனக்கு நல்ல முகவரியைக் கொடுத்தது பாலசந்தர் படம்னா, அந்த முகவரியில் என்னைத் தங்க வைத்தது எஸ்பி.முத்துராமன்தான்.
1000 படம் நடிச்சாலும் ஒரு படம் ரஜினியோடவோ அல்லது கமலோடவோ நடிச்சா அதுதான் பேசப்படும். வேலைக்காரன்கறது கவிதாலயா புரொடக்ஷன்தான். அப்போ பாலசந்தர் சார் சொன்னாரு. ஒரு படம் பண்றேன்டா. எஸ்பிஎம்.தான் டைரக்டர். அதுல உனக்கு ஒரு கேரக்டர் இருக்கு. போய் பாருன்னாரு.
வேலைக்காரன்: அப்போ அவரைப் போய் பார்த்தேன். வேலைக்காரன்னு ஒரு படம் பண்றேன். அதுல சூப்பர்ஸ்டார்தான் ஹீரோ. நீ அமலாவோட பிரதர். கண்ணு தெரியாம நடிக்கணும். நடிப்பியான்னு கேட்டார். அப்பவே நான் கண்ணை மலத்திக்கிட்டு நடிப்பேன் சார்னு சொன்னேன். எப்படி நடிக்கிறான் பாருய்யா.
பணக்காரன், அதிசயப்பிறவி: இப்படியே வச்சிக்க முடியுமா உன்னால...? அரை மணி நேரம் இல்ல. ஒரு மணி நேரம் கூட இப்படியே வச்சிக்க முடியும்னு சொன்னேன். ஒண்ணும் பிராப்ளம் இல்லன்னு சொன்னேன். அது அவருக்கு ரொம்ப பிடிச்சிப் போச்சு. அதுல நிறைய சீன் வரும். அப்புறம் பணக்காரன், அதிசயப்பிறவின்னு நிறைய படம் பண்ணிட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஞாபகசக்தி: அதே போல இவரது குழந்தைகளில் ஒருவரான அஜிதா ரஜினியுடன் இணைந்து கண்தானம் என்று ஒரு டாக்குமெண்ட்ரியில் நடித்தாராம். அதை நினைவு வைத்தபடி பல இடங்களில் ரஜினியும் அவரைப் பார்க்கும்போதெல்லாம் விசாரிப்பாராம். அவர் வளர்ந்து அவருக்கு ஒரு பொண்ணு இருக்கு.
கண்தானம்: அந்த சமயத்தில் கூட ஒரு முறை பார்த்த போது இப்படி கேட்டாராம். நீ அஜீதா தானே. கண்தானம் என்னோடு நடிச்ச பொண்ணுதானே. அப்பா எப்படி இருக்காரு? ஒருநாள் வீட்டுக்கு வரச்சொல்லுன்னு சொல்வாராம். அந்த வகையில் ஞாபகசக்தி கொண்டவர் ரஜினி என மெய்சிலிர்க்கிறார் அச்சமில்லை கோபி.