சத்தமே இல்லாமல் சம்பவம் செய்த லக்கி பாஸ்கர்... 2-ம் நாளில் வசூல் எவ்வளவு தெரியுமா..?

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:30:27  )

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ் சினிமாவில் மூன்று திரைப்படங்கள் ரிலீஸ் ஆகியது. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் திரைப்படம், அடுத்ததாக கவினின் நடிப்பில் உருவான பிளடி பெக்கர் திரைப்படம், அடுத்ததாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பிரதர் ஆகிய மூன்று திரைப்படங்கள் தீபாவளி ரேசில் பங்கு பெற்றது. இதில் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் திரையரங்குகளில் சக்க போடு போட்டு வருகின்றது.

வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகின்றது. அதேபோல் கவின் திரைப்படமும் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றது. இதில் கவலைக்கிடமான நிலையில் இருப்பது நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த பிரதர் திரைப்படம் தான். இந்த மூன்று படங்களை தாண்டி வேறு மொழி திரைப்படமாக வெளியானது துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் திரைப்படம் தான்.

இந்த திரைப்படத்திற்கு தமிழ் சினிமாவில் குறைந்த அளவு திரையரங்குகளில் ஒதுக்கப்பட்டிருந்தாலும் தெலுங்கில் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. வெங்கி அட்லுரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி, ராம்கி உள்ள பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் லக்கி பாஸ்கர். தெலுங்கில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

சித்தாரா நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தது. இப்படத்தை தமிழகத்தில் ராக்போர்ட் நிறுவனம் வெளியிட்டது. தமிழகத்தில் முதலில் 50 திரையரங்குகளுக்கும் மேல் திரையிடப்பட்டது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் லக்கி பாஸ்கர் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் தொடர்ந்து திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டு தற்போது 150 திரையரங்குகளில் இப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் ராக்போர்ட் நிறுவனம் பெரும் மகிழ்ச்சியில் உள்ளது. வரும் நாட்களில் இன்னும் திரையரங்குகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது. மேலும் இரண்டு நாட்களில் இந்த திரைப்படம் உலக அளவில் 26.2 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.

லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் ஒரு வங்கியின் கேஷியராக பணியாற்றி வரும் துல்கர் சல்மான் ஒரு மிடில் கிளாஸ் வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றார். குடும்பத்தின் சூழல், நிதி நெருக்கடி காரணமாக நேர்மையை தவறும் சூழல் உருவாகின்றது. பின்னர் அதனால் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், சவால்களை எப்படி சமாளிக்கின்றார் என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதை. காட்சிக்கு காட்சி மிக விறுவிறுப்பாக திரை கதையை வடிவமைத்திருக்கின்றார் இயக்குனர்.

படத்தின் பெரும்பாலான வசனங்கள் நம்மை கைதட்ட வைத்து இருக்கின்றது. மீனாட்சி சவுத்ரி தனது கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்திருக்கின்றார். இந்த திரைப்படம் 1989 முதல் 1992 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடப்பதையும், அதற்கு ஏற்றது போல் காட்சி அமைப்புகளும் இருக்கின்றது. இந்த படம் நம்மை 30 ஆண்டுகளுக்கு பின்னோக்கி கொண்டு செல்கின்றது. இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷின் இசை மிக விறுவிறுப்பாக உள்ளது. இந்த படத்தில் இருக்கும் 2 பாடல்களும் மிகச் சிறப்பாக இருந்தது. மொத்தத்தில் படம் தீபாவளி விடுமுறைக்கு குடும்பத்துடன் சென்று பார்க்கும் ஒரு சிறந்த படமாக இருக்கும்.

Next Story