விஜயின் மாநாட்டில் கலந்து கொண்டது இவ்வளவு பேரா?!.. தளபதி மாஸ் காட்டிட்டாரே!..

Published on: November 7, 2024
---Advertisement---

Tvk Maanaadu: தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் விஜய். கோட் படத்தில் நடிக்க 200 கோடி சம்பளம் வாங்கிய நடிகர் இவர். இன்னும் எத்தனை கோடி அவர் கேட்டாலும் கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால், விஜயை அதை விட்டுவிட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில் அரசியலுக்கு வந்திருக்கிறார்.

அவர் துவங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கட்சி மாநாடு நேற்று விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவாண்டியில் நடந்தது. கடந்த 10 நாட்களுக்காகவே அதற்கான பணிகள் நடந்து வந்தது. விஜய் இதுவரை அவர் நடிக்கும் படங்களின் இசை வெளியீட்டு விழாவில் மட்டுமே பேசியிருக்கிறார்.

அதுவும், மிகவும் குறைந்த நேரம் மட்டுமே பேசுவார். அதோடு, விஜய் மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவர். பலரும் இருக்கும் மேடைகளில் அதிகம் பேசமாட்டார். ஆனால், நேற்று அவர் மாநாட்டில் பேசியது பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. எந்த பதட்டமும் இல்லாமல் நிதானமாக, படபடப்பு இன்றி பக்குவமாக பேசினார்.

எங்கேயும் அவர் தடுமாறவில்லை. யோசிக்கவில்லை. தான் பேச நினைத்த்தை மிகவும் சரளமாகவும், தெளிவாகவும் பேசினார். தன்னுடைய கொள்கை என்ன? தன்னுடைய கொள்கை எதிரி யார்?.. அரசியல் எதிரி யார்? என தெளிவாக சொன்னார். இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 26ம் தேதி இரவு முதலே விஜய் ரசிகர்கள் மாநாட்டு திடலில் கூடிவிட்டனர். பலர், அங்கேயே படுத்து தூங்கினார்.

நேற்று தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலில் இருந்தும் வேன், பைக், கார், பேருந்து, ரயில் ஆகியவற்றில் விஜய் ரசிகர்கள் விக்கிரவாண்டியை நோக்கி வந்தனர். வண்டிகள் நிறுத்துவதற்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டும் ஒரு கட்டத்தில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் 10 கிலோ மீட்டர் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே, பலரும் இறங்கி சாலையில் நடந்து சென்றார்கள்.

இந்நிலையில், 5 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த மாநாட்டில் 8 லட்சம் பேர் கலந்து கொண்டனர் என சொல்லப்படுகிறது. ஆனாலும் அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment