தமிழ் சினிமாவில் அஜித்தான் முதல் ஹீரோ.. இதையும் விட்டு வைக்கலயா நம்ம தல?

by ராம் சுதன் |

தற்போது அஜித் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த படம் ஏப்ரல் பத்தாம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கின்றது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அஜித்தும் த்ரிஷாவும் ஆறாவது முறையாக இணையும் திரைப்படம் தான் குட் பேட் அக்லி .இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார்.

இவர்களுடன் இணைந்து பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில் என பல முக்கிய பிரபலங்களும் படத்தில் நடித்திருக்கின்றனர். அஜித்தின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் விடாமுயற்சி. வழக்கமான அஜித் படங்களில் இருக்கும் மாஸ் விடாமுயற்சி திரைப்படத்தில் மிஸ் ஆனதால் இந்த படம் கலையான விமர்சனத்தை பெற்றது. இருந்தாலும் சில பேருக்கு இந்த படம் மிகவும் பிடித்திருந்தது.

அதனால் இந்தப் படத்தில் என்னென்ன அம்சங்கள் மிஸ் ஆனதோ அதை பல மடங்கு குட் பேட் அக்லி திரைப்படத்தில் கொடுத்திருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். மார்க் ஆண்டனி திரைப்படம் போல் பத்து மடங்கு என்றும் சொல்லப்படுகிறது. அஜித் நடித்த மாஸ்ஸான ஆக்சன் படங்களான பில்லா, மங்காத்தா, வேதாளம் ,வாலி ,தீனா போன்ற படங்களை எல்லாம் ஒன்று சேர்த்து ஒரு கோர்வையாக குட் பேட் அக்லி திரைப்படத்தில் காட்டி இருக்கிறார் ரவிச்சந்திரன்.

அதனால் குட் பேட் அக்லி திரைப்படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தை படைக்க போகிறது. அனைவரும் கொண்டாடும் படமாக இந்த படம் கண்டிப்பாக இருக்கப் போகிறது என திரையுலகில் பேசி வருகின்றனர். இந்த நிலையில் அஜித்தை பற்றி ஒரு டிவி நிகழ்ச்சியில் ரம்பா கூறிய ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. போன் வந்ததற்கு பிறகும் பேஜர் யூஸ் பண்ண முதல் தமிழ் ஹீரோ அஜித் தான் என ரம்பா அந்த நிகழ்ச்சியில் கூறி இருக்கிறார் .

90கள் காலகட்டத்தில் பேஜர் மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது .குறுஞ்செய்திகளை பகிரும் ஒரு கருவியாக இந்த பேஜர் பயன்படுத்தப்பட்டது. 90ஸ் கிட்ஸ்களுக்கு இதைப்பற்றி நன்கு தெரியும். ஆனால் இப்பொழுது உள்ள 2k கிட்ஸ்களுக்கு பேஜர் என்றால் என்ன என்பது தெரியாது. அதனால் அஜித்தை பற்றி ரம்பா இந்த விஷயத்தை கூறியதும் 2கே கிட்ஸ் உடனே கூகுளில் பேஜர் என்றால் என்ன என்பதை ஆராய தொடங்கி விட்டனர்.

Next Story