மே 1 அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்... அப்போ பொங்கலுக்கு கிடையாதா..? பக்கா பிளான் போட்ட பிரபலம்!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:32:23  )

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் அஜித். இவரின் படங்களை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவது வழக்கம். கடைசியாக எச் வினோத் இயக்கத்தில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் நடிகர் அஜித்தின் எந்த திரைப்படமும் திரைக்கு வரவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் சற்று சோகத்தில் இருக்கிறார்கள்.

துணிவு திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் கமிட்டான திரைப்படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜவ்வு போல் இரண்டு வருடங்களாக இழுத்து வருகிறார்கள். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கின்றது. இந்த படம் தொடர்பான எந்த ஒரு அப்டேட்டும் பெரிய அளவில் வந்த பாடில்லை.

விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதே நடிகர் அஜித்குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. தொடர்ந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் புகைப்படங்கள் மற்றும் அப்டேட்டுகளை வெளியிட்டு குஷிப்படுத்தி வருகிறார்கள்.

ஒரு கட்டத்தில் விடாமுயற்சி படத்தின் அப்டேட்டை கேட்பதையே அஜித் ரசிகர்கள் மறந்துவிட்டார்கள். நேற்று தான் விடாமுயற்சி திரைப்படத்தின் டப்பிங் பண்ணி தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதே சமயம் குட் பேட் அக்லி திரைப்படமும் பொங்கலுக்கு தான் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது.

ஆனால் தற்போது விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் எனவும், நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் அவரின் பிறந்த நாளான மே ஒன்றாம் தேதி ரிலீஸ் செய்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றது. இதற்கு முன்னதாக மே 1-ம் தேதி அஜித்தின் பிறந்தநாளில் பல திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த திரைப்படங்கள் அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதனால் நடிகர் அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திரா மே 1 தேதி குட் பேட் அக்லி திரைப்படத்தை வெளியிடுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறாராம். அது மட்டும் இல்லாமல் பொங்கல் பண்டிகையில் சங்கர் இயக்கியிருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படம் வர இருப்பதால் பொங்கல் ரேசிலிருந்து குட் பேட் அக்லி திரைப்படத்தை மாற்றி மே ஒன்றாம் தேதி ரிலீஸ் செய்வதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

Next Story