தனுஷ் விஷயத்துல பொய்... சூர்யாவுக்கோ வன்முறை...! இயக்குனர் ஜிவிஎம்மை விளாசும் பிரபலம்

துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடுவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. அதனால் தற்போது இயக்குனர் கௌதம் மேனன் பல ஊடகங்களில் பேசி வருகிறார். தனுஷ் உள்பட பல முன்னணி நடிகர்களும் இவரைக் கைவிட்டுட்டாங்க.
அந்த விரக்தியில் அவர்கள் மீது குற்றச்சாட்டை முன்வைத்துப் பேசுகிறார். சூர்யா இவரது படத்தில் நடிக்க ஒத்துக்கிட்டாரு. டேட்டும் சொல்லிட்டாரு. பல மாசங்கள் காத்திருக்காரு. ஆனா சப்ஜெக்டை ரெடி பண்ணிக் கொண்டுவரவே இல்லை.
கடுப்பான சூர்யா: சப்ஜெக்ட்டை ரெடி பண்றேன் பண்றேன்னு காலத்தைக் கடத்திக்கிட்டே இருக்காரு. ஒரு கட்டத்துல சூர்யா கடுப்பாகி இனி இந்தப் படத்துலயே நடிக்க மாட்டேன். இனி ஜிவிஎம் படத்துலயே நடிக்க மாட்டேன்னு பகிரங்கமா அறிவிச்சிட்டாரு.
தனக்குக் காக்க, காக்க, வாரணம் ஆயிரம் என இரு வெற்றிப்படங்களைக் கொடுத்த ஒரு இயக்குனர் தான் கௌதம் மேனன். ஆனா அவரு படத்துல இருந்து இப்படி பகிரங்கமா அறிவிச்சி வெளியேறுறாருன்னா அவர் எந்தளவு மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பார்?
வன்முறை இல்லையா?: 2 படம் ஹிட் கொடுத்ததால உங்களுக்காக அவரு 10 வருஷம் காத்துக்கிட்டு இருக்க முடியுமா? அப்படி காத்துக்கிட்டு இருங்கன்னு சொல்றதே வன்முறை இல்லையா? இந்த விஷயத்துல ஜிவிஎம் மேல தான் தவறு. இன்னைக்கு இவங்க எல்லாம் திருப்பிப் பேச மாட்டாங்கங்;கற நம்பிக்கையில குற்றச்சாட்டை சுமத்துகிறார்.
அப்படித்தான் தனுஷ் மீதும். என்னை நோக்கி பாயும் தோட்டா படத்துலயும் சரியான கதை இல்லாம, எந்த பிளானும் இல்லாம கெடுத்தது இவர் தான் என்கிறார் வலைப்பேச்சு பிஸ்மி.
நான் எடுத்த படமா?: என்னை நோக்கி பாயும் தோட்டா நான் எடுத்த படமா? அதுல ஒரு பாடல் இருக்கு. அதுதான் நினைவுல இருக்கு. அது தனுஷ் எடுத்த படம்தானேன்னு சொல்றாரு ஜிவிஎம். இதற்கு பதில் சொன்ன பிஸ்மி, இந்தப் படம் ரிலீஸ் ஆகி எத்தனை வருஷம் ஆகுது? எத்தனை வருஷம் முடங்கி இருந்தது?
தனுஷ் பக்கம்: அப்ப எல்லாம் பேசாம இன்னைக்கு பிளாப் ஆனதால அந்தத் தோல்விக்கு நான் காரணமல்ல. நான் எடுக்கல. அதுக்கு இவர்தான் காரணம்னு தனுஷ் பக்கம் தள்ளிவிடுறாரு. இவர் கூற்றுப்படி தனுஷ்தான் எடுத்தாருன்னா அந்தப் படத்துல அவரோட சாயலே இல்லையே.
ஏன் வாய்ஸ் ஓவர்?: இன்னைக்கு எவ்வளவு படம் தனுஷ் இயக்கி இருக்காரு. இன்னும் சொல்லப்போனா அந்தப் படம் முழுக்க ஜிவிஎம்மோட வாய்ஸ் ஓவர்தான் வரும். அதுக்கு ஏற்ப காட்சிகளை சொருகி இருப்பாரு. தனுஷ் டைரக்ட் பண்றாருன்னா நீங்க ஏன் வாய்ஸ் ஓவர் கொடுத்தீங்க? அப்பவே வெளியே வந்துருக்கலாமே. அதனால அவர் பொய் சொல்வதாகத் தான் நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.