ஃபர்ஸ்ட் அஜித்!. இப்ப விஜய்!. சிக்கி சின்னபின்னமாகும் ஹெச்.வினோத்!.. ஐயோ பாவம்!....

கமல், ரஜினிக்குப் பிறகு அஜீத், விஜய் இருவரும் தமிழ்த்திரை உலகை ஆக்கிரமித்தனர். அவர்கள் ஆரம்பத்தில் இயக்குனர்களுக்கு சுதந்திரம் கொடுத்தனர். முன்னர் கமல் இயக்குனரிடம் தலையிடுகிறார் என்று சொன்னார்கள். இப்போது அஜீத், விஜய் இருவரையும் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் இருவரிடமும் இயக்குனர் எச்.வினோத் எப்படி சிக்கியுள்ளார்? வாங்க பார்க்கலாம்.
வலிமை: எச்.வினோத் முதலில் அஜீத் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கினார். அது இந்தி படத்தின் ரீமேக். அந்தப் படத்தை அப்படியே எடுத்தார். அதுல அஜீத்தின் தலையீடு எதுவும் இல்லை. அதன்பிறகு வலிமை படத்தை அஜீத்தை வைத்து இயக்கினார். அந்தப் படத்தை அஜீத் பார்க்கும்போது இந்த படம் ரிச்சாவும், கிளாசாவும் இருக்கு என சொல்லி அதில் அம்மா மற்றும் தம்பி சென்டிமென்ட் ஆகியவற்றை சேர்க்கச் சொன்னாராம்.
அதன்படி எச்.வினோத்தும் படத்தில் சில மாற்றங்களைச் செய்தார். கடைசியில் படம் ட்ரோலில் சிக்கியது. எதிர்பார்த்தபடி வரவேற்பைப் பெறவில்லை. எச்.வினோத் தன்னிச்சையாக செயல்பட முடியவில்லை.
விஜய் 69: தொடர்ந்து அதே கதை விஜய் 69 படத்திலும் அரங்கேறுகிறது. அந்த வகையில் இந்தப் படத்தில் விஜயின் தலையீடு எப்படி இருந்ததுன்னு பார்ப்போம். அதே நேரம் படத்தின் அப்டேட் குறித்தும் எந்த நிலையில் உள்ளதுன்னு பார்ப்போம். இதுகுறித்து பிரபல வலைப்பேச்சாளர் பிஸ்மி என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா...
விஜய் ரிலீவ்: விஜய் 69 படப்பிடிப்பு நடந்துக்கிட்டு இருக்கு. மாசத்துக்கு 15 நாள் டேட் கொடுத்துருக்காரு. ஜனவரில அவர் 15 நாள் நடிச்சிருக்கணும். ஆனா அவர் இன்னும் நடிக்கல. இப்ப பரந்தூர் போறாரு. அதனால இப்ப தள்ளி வச்சிட்டாங்களா என்னன்னு தெரியல.
ஆனா விஜயைப் பொருத்தவரைக்கும் இந்தப் படத்தை பிப்ரவரி எண்ட் அல்லது மார்ச் மாதத்தோட படப்பிடிப்பை முடிச்சிக் கொடுக்கணும். அதில் இருந்து ரிலீவ் ஆகிறார். அதுதான் இந்தப் படம் குறித்த தகவல்.
தனித்த சிந்தனை: எச்.வினோத் இயக்குவதால் இது அவர் படம் என்று சொல்ல முடியாது. யார் இயக்கினாலும் அது விஜய் படம்தான். எச்.வினோத்துக்குத் தனித்த சிந்தனை, தனித்த பார்வை எல்லாம் உண்டு. ஆனா விஜய் படத்தை இயக்கும்போது அவர் சொல்வதைத்தான் கேட்க முடியும்.
விஜயின் விருப்பம்: இந்தப் படமே பகவந்த் கேசரி என்கிற தெலுங்கு மசாலா படத்தின் ரீமேக். மசாலா படம்னு நானே சொல்லிட்டேன். ஆனா கற்பனைக்கு எட்டாத மசாலா படம். அப்படி ஒரு படத்தை இவர் இயக்குகிறார் என்றால் அது விஜயின் விருப்பம்தானே. அதனால நிச்சயமா இது விஜய் படம்தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.