விலையே போகாத விடாமுயற்சி ரைட்ஸ்!.. கமுக்கமா இருக்கும் லைக்கா.. அஜித்துக்கு வந்த சோதனையா?..

Actor Ajith: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வருபவர் நடிகர் அஜித். தற்போது கார் ரேசில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகின்றார். இந்த வருடத்தில் 9 மாதம் கார் ரேஸில் தான் கவனம் செலுத்த இருப்பதாக கூறியிருக்கின்றார். கடந்த வருடத்தின் இறுதியிலேயே தான் கமிட் செய்திருந்த விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்றுவிட்டார்.
விடாமுயற்சி திரைப்படம்: லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருந்த திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தை எடுத்து முடிப்பதற்கு கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த திரைப்படம் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்த காரணத்தால் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ஒரு தோல்வி படமாக மாறி இருக்கின்றது விடாமுயற்சி. படத்தின் டீசர் மற்றும் டிரைலரை வைத்து பார்க்கும் போது நிச்சயம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் முதல் பாதி நன்றாக இருந்தாலும், இரண்டாவது பாதி விறுவிறுப்பாக இல்லை என்று ரசிகர்கள் கூறி வந்தார்கள். அதுமட்டுமில்லாமல் அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்த மாஸ் காட்சிகள் இந்த திரைப்படத்தில் இல்லை. கைதட்டி விசில் அடித்து கொண்டாடும் வகையில் எந்த காட்சிகளும் படத்தில் இடம்பெறாததால் படம் பெரிய அளவு சோபிக்கவில்லை.
விடாமுயற்சி வசூல்: இந்த திரைப்படம் தமிழகத்தில் தற்போது வரை 100 கோடியை கூட நெருங்கவில்லை என்று கூறப்படுகின்றது. மேலும் உலக அளவில் இப்படம் 150 கோடி வரை வசூல் செய்திருக்க வாய்ப்பிருப்பதாக கூறி வரும் நிலையில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை. வசூல் தொடர்பான எந்த ஒரு அறிவுப்பையும் லைக்கா நிறுவனம் வெளியிடாமல் கமுக்கமாக இருந்து வருகின்றது.
விடாமுயற்சி ரைட்ஸ்: தொடர்ந்து வசூல் தொடர்பாக ஆளுக்கு ஒரு தகவலை கூறிவரும் நிலையில் உண்மையான வசூல் நிலவரம் என்ன என்பது தற்போது வரை கேள்விக்குறியாக இருந்து வருகின்றது. மேலும் இந்த திரைப்படத்தின் ஹிந்தி சேட்டிலைட் ரைட்ஸ் தற்போது வரை விற்பனையாக வில்லையாம். முதலில் படம் வெளியிட்டுக்கு முன்பு ஒரு நிறுவனம் படத்தை வாங்குவதற்கு முன் வந்திருக்கின்றது.
அதாவது இவ்வளவு தொகை கொடுத்து படத்தை வாங்குகின்றேன் என்று ஒப்பந்தம் செய்திருந்த அந்த நிறுவனம் படம் ரிலீசுக்கு பிறகு தொடர்ந்து வந்த ரிப்போர்ட்டை பார்த்துவிட்டு இவ்வளவு தொகை கொடுத்து இந்த படத்தை வாங்க முடியாது என்று கூறி விட்டார்களாம். லைக்கா நிறுவனம் தொகையில் எந்த ஒரு சமரசமும் செய்யாத காரணத்தால், அவர்கள் இந்த படத்தை வேண்டாம் என்று கூறியிருப்பதாக சினிமா விமர்சகர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.