1000 ரூபாய்க்கு வாடகை.. கொன்னுடுவேனு மிரட்டுறாரு.. கஞ்சா கருப்பு மீது பரபரப்பு புகார்..!

by ramya suresh |
1000 ரூபாய்க்கு வாடகை.. கொன்னுடுவேனு மிரட்டுறாரு.. கஞ்சா கருப்பு மீது பரபரப்பு புகார்..!
X

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் கஞ்சா கருப்பு. மதுரையைச் சேர்ந்த இவரின் உண்மையான பெயர் கருப்பு ராஜா. இவர் பாலா இயக்கத்தில் வெளிவந்த பிதாமகன் திரைப்படத்தில் கஞ்சா விற்பனை செய்யும் நபராக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதனை தொடர்ந்து கஞ்சா கருப்பு என்று அழைக்கப்பட்டார்.

பின்னர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றார். பின்னர் வாய்ப்பு குறையவே விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிகளும் கலந்து கொண்டார். அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு பெரிய அளவு வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் கிடைக்கும் படங்களில் நடித்து வருகின்றார்.

இவர் தற்போது சென்னை வளசரவாக்கம் பகுதியில் வசித்து வருகின்றார். நேற்று தனது வீட்டு உரிமையாளர் மீது கஞ்சா கருப்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'நான் இந்த வீட்டிற்கு குடி வந்து 4 வருடம் ஆகின்றது. வீட்டு வாடகை 20,000 கரெக்டாக மாதம் தவறாமல் கொடுத்து வருகின்றேன். எனது வீட்டு வாடகையை கொடுத்து விடுவேன். அவரும் நல்ல மனிதர் தான்.

இதுவரை ஏதாவது பிரச்சினை என்றால் உடனே சரி செய்து கொடுத்துவிடுவார். ஆனால் திடீரென்று என்ன ஆனது தெரியவில்லை கடந்த மாதம் வீடு வேண்டும் என்று கேட்டார். நீங்கள் காலி பண்ணி விடுங்கள் என்று சொன்னார். கொஞ்சம் டைம் கேட்டேன். என்னை வீட்டை விட்டு காலி செய்ய வைப்பதிலேயே குறியாக இருந்தார். அதன் பிறகு நானும் வீடு தேட தொடங்கினேன். சமீபத்தில் மதுரைக்கு சென்றிருந்த நிலையில் என் வீட்டு பூட்டை உடைத்து வீட்டிற்கு போய் பொருட்களை எல்லாம் ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு வெள்ளை அடித்திருக்கிறார்கள்.

ஏன் இப்படி செய்தீர்கள் என்று விசாரிக்க சினிமாக்காரர் நீங்கள் வீட்டை ஏமாற்றி ஆட்டைய போட பார்க்கிறீர்களா என்று கூறினார்கள். என் வீட்டிற்குள் இருந்த கலைமாமணி விருது டாலர் அனைத்தையும் காணோம்' என்று புகாரில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது அவர் மீது மற்றொரு நபர் புகார் அளித்திருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'மதுரவாயில் கிருஷ்ணா நகர் பகுதியில் இருக்கும் எனது வீட்டை நடிகர் கஞ்சா கருப்பு அவர்களுக்கு வாடகைக்கு விட்டிருந்தேன்.

2021 ஆம் ஆண்டு அவருக்கு வாடகைக்கு விட்டேன். முதலில் இரண்டு வருடங்கள் வாடகை சரியாக கொடுத்து வந்தார். அதன் பிறகு வாடகை எனக்கு கொடுக்கவே இல்லை. நான் தொடர்ந்து பணம் கேட்கும் போதெல்லாம் அடுத்த மாதம் கொடுத்து விடுகின்றேன் என்று சொல்லிக் கொண்டே இருந்தார். கடந்த வருடம் நான் அவரை வீட்டை காலி பண்ண சொல்லி கூறி இருந்தேன். ஆனால் வீட்டை காலி செய்யவே இல்லை.

பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டை வந்து பார்க்கும்போது அவர் வேறு ஒருவருக்கு வீட்டை வாடகைக்கு விட்டிருக்கின்றார் . ஆயிரம் ரூபாய்க்கு நான் இந்த வீட்டில் வாடகைக்கு இருக்கின்றேன் என்றார். அதன் பிறகு தான் தெரிந்தது அவர் உள் வாடகைக்கு வீட்டை வாடகைக்கு விட்டு இருக்கின்றார் என்பது, வீடு முழுவதும் மது பாட்டில்கள் ஒரு லாட்ஜ் போல வீட்டை வைத்திருந்தார்கள்.

அதன் பிறகு நான் நோட்டீஸ் அனுப்பினேன். கஞ்சா கருப்பு அவரின் மனைவி வீட்டு காலி செய்து கொடுத்துவிடுகின்றேன். முழு பணத்தையும் செட்டில் செய்து விடுகின்றேன் என்று சொன்னார். ஆனால் அதையும் அவர்கள் செய்யவில்லை. பின்னர் அவருக்கு போன் செய்து கேட்டால் உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டுகின்றார். அதற்கான அனைத்து ஆடியோ ஆதாரமும் என்னிடம் இருக்கின்றது.

அதனைத் தொடர்ந்து இன்று காலை 10 பேரை அழைத்துக் கொண்டு வந்த கஞ்சா கருப்பு வீட்டை உடைத்து விடுவேன் என்று என்னை மிரட்டுகின்றார். இதனைத் தொடர்ந்து நான் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றேன். மேலும் எனக்கு வாடகை பாக்கி 3 லட்சம் கொடுக்க வேண்டும்' என்று அவர் பேட்டி அளித்து இருக்கின்றார். இந்த வீடியோவுடன் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story