ஒரு டைட்டில்ல இவ்ளோ விஷயங்களா? அட அந்தப் படமா? அப்படின்னா ஹிட்தான்...!

ஒரு படத்தின் டைட்டிலே அந்தப் படம் எப்படிப்பட்டது? எந்த வகையில் எடுக்கப்பட்டு இருக்கும் என்பதைச் சொல்லிவிடும். அந்தக் காலத்தில் உள்ள படங்களின் டைட்டில் எல்லாம் யோசிக்க வைக்கும் விதத்தில் இருக்கும். தாய் மகளுக்குக் கட்டிய தாலி, மணாளனே மங்கையின் பாக்கியம், தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக்காத்த தனயன், ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
அதன்பிறகு கதாநாயகனின் பெயர் தான் டைட்டிலாக வைக்கப்பட்டது. அண்ணாமலை, பாட்ஷா, தளபதி, ஏழுமலைன்னு. பெரும்பாலும் ஆக்ஷன் படங்களாகவே ஹீரோக்கள் நடிக்க விரும்புகிறார்கள். அதுதான் தற்போது ட்ரெண்டாக உள்ளது. இன்றைய ரசிகர்களும் அதைத்தான் ரசிக்கிறார்கள்.
அதே நேரம் ஒரு படம் ஓட வெறும் ஆக்ஷன் மட்டும் போதாது. திரைக்கதை, சென்டிமென்ட், காமெடி, பாடல்கள் என பல மசாலாக்களும் கலக்க வேண்டும். இவை சரியான விகிதத்தில் அமையும்போது படம் சூப்பர்ஹிட் ஆகி விடுகிறது. பெரும்பாலும் படத்தின் டைட்டிலே படம் எப்படி இருக்கும்? ஓடுமா, ஓடாதா என்று சொல்லிவிடும்.
அந்த வகையில் தற்போது வெளிவர உள்ள வீரதீர சூரன் படமும் சேர்ந்துள்ளது. இந்தப் படத்தின் டைட்டில் உருவான விதம் பற்றி படத்தின் இயக்குனர் அருண்குமார் என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா...

veera dheera sooran 2
டைட்டில் தான் வீரனுக்கான அடையாளம். டைட்டில்னா ஒரு வார்த்தையில இருந்தா தான் பெரிய டைட்டிலா இருக்கும். வீர தீர சூரன்னு ராகமா இருப்பது எனக்குப் பிடித்திருந்தது. அது யார் என்று கேள்வி வரும். அவங்களைப் பத்தி தான் இந்த படம் பேச போகுதுன்னு தெரியும்.
நான் சொல்லும்போதே டைட்டிலோட டிசைனையும் சொல்லிவிட்டேன். இந்த டைட்டில் மேலே இருந்து கீழே வருவதற்குக் காரணம். ஒரு வீரனுக்கான அடையாளமாக இருக்கும் என்று நினைத்தேன். ஒரு கொடி மாதிரி, ஜாப்பனீஸ் ஸ்டைல இருக்கணும்னு நினைச்சேன். இவ்ளோ விஷயம் அந்த டைட்டில்ல இருக்கு என்கிறார் இயக்குனர் அருண்குமார்.
அருண்குமார் இயக்கியுள்ள வீர தீர சூரன் படத்தில் விக்ரம், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.