ஒரு நடிகைக்காக இவ்ளோ சண்டையா? அதுவும் இளையராஜா, ரஜினிக்கு இடையேன்னா பாருங்க..!

ரஜினியும், இளையராஜாவும் எனக்காக சண்டை போட்டாங்க என்று சொல்கிறார் தினசரி படத்தோட தயாரிப்பாளர் மற்றும் நடிகை சிந்தியா. ஆச்சரியமாக இருக்கிறதா? வாங்க அவங்களே என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்.
போட்டோ: தினசரி படத்துல இளையராஜா மியூசிக் வேணும்னு ஆசை. அதனால கேட்டோம். 5 பாடல்கள். வெஸ்டர்ன், குத்துப்பாட்டுன்னு எல்லாம் இருக்கு என்றார் சிந்தியா. ரஜினி, இளையராஜா சார் பக்கத்துல இருக்குற போட்டோவுல நான் இருந்தேன். அந்தப் போட்டோ எடுக்கும்போது ரஜினி சார் செல்பி எடுக்கறதா சொன்னாரு. எனக்கு வந்து செல்பி வேண்டாம்னு சொன்னேன்.
கழட்டி விட்டுட்டு: அப்போ ராஜா சாரோட மேனேஜர்கிட்ட கொடுத்து பிக்சர் எடுக்கலாம்னு சொன்னேன். முதல்ல நானும், இளையராஜா சாரும் நிறைய படம் எடுத்தோம். அப்புறம் பேசிக்கிட்டு இருந்தோம். சரி. ரஜினி சார் கூட எடுக்கலாம்னு சொன்னதும் ராஜா சார் ஒரு மாதிரி பார்த்துக்கிட்டு இருந்தாரு. என்னடா இவ்வளவு நேரமா நம்ம கூட பேசிக்கிட்டு இப்ப இப்படி கழட்டி விட்டுட்டுப் போறாங்களேன்னு பார்ப்பாங்கள்ல. அப்படி இருந்தது.
உடனே அது எனக்குப் புரிஞ்சிடுச்சு. ராஜா சார் நீங்களும் உள்ள வாங்கன்னு சொன்னதும் அவர் வந்தார். அப்போ வெரி ஹேப்பி. அப்படித்தான் எடுத்தோம். உள்ள வந்ததுக்கு அப்புறம்தான் யாரு நடுவுல நிக்கிறது? யாரு சைடுல நிக்கிறதுன்னு வந்தது. ஏன்னா ராஜா சார் ரஜினி சாருக்கு ரெஸ்பெக்ட் கொடுக்கணும்னு நினைக்கிறாரு.
நடுவுல நிக்கிறதுல சண்டை: ஆனா ரஜினி சார் ராஜா சாருக்கு ரெஸ்பெக்ட் கொடுக்கணும்னு நினைக்கிறாரு. இந்தப் பொண்ணு நடுவுல நிக்கட்டும். நாம சைடுல நிப்போம்கறாரு. இவருக்கு என்னன்னா இரண்டு பேரும் சமம்னு நினைக்கிறாரு. இப்படி நடுவுல நிக்கிறதுல சண்டை போய்க்கிட்டே இருக்கு.
கேமராவை எடுக்குறவரு பார்க்குறாரு. என்னடா இவங்க ரெண்டு பேரும் இப்படி சண்டை போடுறாங்கன்னு தோணுது. அப்புறம் என்ன இப்படிப் போய்க்கிட்டு இருக்கு? நாம இப்படியே எடுத்துடலாம்னு எடுத்த போட்டா தான் இது என்கிறார் நடிகை சிந்தியா.