சிம்பொனி அனுபவம் எப்படி இருந்தது!.. ஃபீல் பண்ணி பேசிய இளையராஜா!...

by சிவா |
சிம்பொனி அனுபவம் எப்படி இருந்தது!.. ஃபீல் பண்ணி பேசிய இளையராஜா!...
X

Ilayaraja symphony: பண்ணைபுரத்தில் பிறந்து சினிமாவில் இசையமைப்பாளராக மாறி பல சாதனைகளை செய்த இளையராஜா இப்போது இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் சிம்பொனி இசையை அமைத்திருக்கிறார். அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி 8500 பாடல்களுக்கும் மேல் இசையமைத்திருக்கிறார். 1523 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.1500 பாடல்களை எழுதியிருக்கிறார்.

இந்திய அளவில் இசைத்துறையில் இளையராஜா செய்த சாதனையை யாரும் செய்யவில்லை என்றே சொல்ல வேண்டு. அதனால்தான் ‘கர்வம் எனக்குதான்டா இருக்கணும். நான் அவ்வளவு செய்திருக்கிறேன்’ என்ன சொல்லும் தகுதி அவருக்கு இருக்கிறது. 80களில் பெரும்பாலான படங்களின் வெற்றிக்கு இவரின் இசையே காரணமாக இருந்திக்கிறது.

ரஜினி, கமல், மோகன் போன்ற முன்னணி நடிகர்கள் எல்லோரின் படங்களுக்கும் இவர்தான் இசை. அப்படி கொடி கட்டி பறந்த இளையராஜா இப்போது சிம்பொனி இசையையும் நிகழ்த்தி காட்டியிருக்கிறார். பொதுவாக வெளிநாட்டு இசைக் கலைஞர்கள்தான் சிம்பொனி இசையை உருவாக்குவார்கள்.

முதன் முறையாக இந்தியாவிலிருந்து ஒருவர் லண்டன் சென்று இசை மேதை பீத்தோவன் சிம்பொனி இசையமைத்த அப்போலோ அரங்கில் சிம்பொனி இசையை நிகழ்த்தி காட்டியிருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே இதற்கான வேலைகளில் இளையராஜா ஈடுபட்டு வந்தார்.

2 நாட்களுக்கு முன்பு சிம்பொனி இசை அமைப்பதற்காக லண்டன் புறப்பட்டு சென்றபோது செய்தியாளர்கள் முன்பு பேசும்போது ‘உங்களுக்கே இவ்வளவு மகிழ்ச்சி என்றால் நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பேன். Incredible இந்தியா போல நான் Incredible இளையராஜா என சொன்னார்’ என சொன்னார். இந்திய நேரப்படி லண்டன் அப்பல்லோ அரங்கில் உலகின் தலைசிறந்த இசைக்குழுவான ராயல் பிலார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுடன் இணைந்து நேற்று இரவு 12.30 மணிக்கு மேற்கத்திய கார்நாடக இசை கலந்த வேலியண்ட் பாரம்பரிய சிம்பொனியை இசையை இளையராஜா நிகழ்த்தினார்.

இசைநிகழ்ச்சி முடிந்த பின் அங்கிருந்தவர்கள் முன் பேசிய இளையராஜா ‘சிம்பொனி அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. சிம்பொனியை அனுபவத்தால் மட்டுமே புரியும். அதை நீங்கள் இன்று முதல் முறையாக அனுபவித்திருக்கிறீர்கள்’ என குரல் ததும்ப நெகிழ்ச்சியுடன் பேசினார்.

Next Story