விஜய் கோட்டைய பிடிக்கப் போகும் அஜித்.. குட் பேட் அக்லி படத்தால் நடக்கப் போகும் சம்பவம்

by ராம் சுதன் |

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி திரைப்படத்திற்கு பிறகு அஜித்தின் நடிப்பில் வெளியாக கூடிய திரைப்படம் தான் குட் பேட் அக்லி. படம் ஏப்ரல் பத்தாம் தேதி உலகெங்கிலும் ரிலீசாக இருக்கின்றது. படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரிய ஹைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விடாமுயற்சி திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில் அஜித்தின் ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தாக இந்த குட் பேட் அக்லி திரைப்படம் அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

படத்தில் பில்லா, தீனா, மங்காத்தா, வாலி என அனைத்தையும் ஒரு கோர்வையாக சேர்த்து கொடுத்திருக்கிறார் ஆதிக். அதுவே ரசிகர்களுக்கு ஒரு பெரிய ட்ரீட்டாக அமையப் போகிறது. அஜித்தின் படங்களை பொறுத்த வரைக்கும் படத்தில் கதை இருக்கிறதோ இல்லையோ ரசிகர்களுக்கான ஒரு தீனி அந்த படத்தில் இருந்தாலே போதும் படத்தை வெற்றியடைய செய்து விடுவார்கள்.

அப்படி ஒரு படமாகத்தான் இந்த குட் பேட் அக்லி திரைப்படம் அமையப்போகிறது. விஷால் கூட ஒரு பேட்டியில் கூறும்பொழுது மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடிக்கும் பொழுது ஆதிக் தன்னிடம் குட் பேட் அட்லி படத்தின் ஒன் லைனை கூறினார். யார் நடிக்கப் போகிறார் என கேட்டேன். அதற்கு அஜித் என ஆதிக் கூறினார். பார்த்துடா பார்த்து கவனமா பண்ணு என நான் சொன்னேன். அந்த அளவுக்கு அந்த படத்தின் கதை வெயிட்டாக இருக்கப் போகிறது என விஷால் அந்த பேட்டியில் கூறினார்.

குறிப்பாக படத்தின் கிளைமேக்ஸ் அனைவருக்கும் ஒரு ஆச்சரியத்தை கொடுக்கும் கிளைமேக்ஸ் ஆகத்தான் இருக்கும். மங்காத்தாவில் எப்படி ஒரு கிளைமாக்ஸ் இருந்ததோ அதைப்போல யாரும் யூகிக்க முடியாத ஒரு கிளைமேக்ஸ் தான் இருக்க போகிறது. மார்க் ஆண்டனி திரைப்படத்தை போல பத்து மடங்கு படமாக குட் பேட் அக்லி திரைப்படம் அமையப்போகிறது.

இந்த நிலையில் விஜய்யின் கோட்டையாக கருதப்படும் மாநிலம் கேரளா. இப்போது அந்த கோட்டையை அஜித் பிடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேரளாவில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் அஜித்தின் படத்தை போடுவதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். அதைப்போல இந்த படத்தை அதிக விலைக்கு வாங்குவதற்கான ஒரு பேச்சு வார்த்தையும் கேரளாவில் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இன்னொரு விஷயம் என்னவெனில் இதுவரை தமிழ் சினிமாவில் முதல் நாளில் அதிக வசூலை அள்ளிய திரைப்படமாக பீஸ்ட் படம் தான் இருக்கிறது. அந்த ஒரு ரெக்கார்டை கண்டிப்பாக குட் பேட் அக்லி திரைப்படம் பிரேக் பண்ணும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பீஸ்ட் படத்தின் முதல் நாள் வசூல் 38.25 கோடி. குட் பேட் அக்லி திரைப்படம் கண்டிப்பாக 40 லிருந்து 42 கோடி முதல் நாள் வசூலை அள்ளும் என்றும் சொல்லப்படுகிறது.

Next Story