என்னய்யா சொல்றீங்க.. அது தாலாட்டுக்காக போட்டதா? கிளாமர ஏத்தி சூப்பர் ஹிட்டாக்கிய இசைஞானி

தமிழ் சினிமாவில் தன்னுடைய இசையால் அனைவரையும் வசியம் செய்தவர் இளையராஜா. இசைஞானி என்று அழைக்கப்படும் இவர் இன்று இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் விதமாக ஒரு விஷயத்தை செய்ய இருக்கிறார். லண்டனில் சிம்பொனி இசையை நடத்த அங்கு சென்று இருக்கிறார் இளையராஜா. இதற்காக திரை பிரபலங்கள் பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.
சமீபத்தில் கூட ரஜினிகாந்த் அவருடைய வாழ்த்து செய்தியை இளையராஜாவுக்காக அனுப்பி இருந்தார். உலக அளவில் தமிழ்நாட்டின் பெருமையை சேர்க்கும் முயற்சியில் இப்போது இளையராஜா இறங்கி இருக்கிறார் .கிட்டத்தட்ட 50 ஆண்டு காலமாக இவருடைய இசை வாழ்க்கை வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கின்றது. எத்தனையோ ஹிட் பாடல்கள். ஒவ்வொரு பாடலுக்கு பின்னாடியும் ஒரு சம்பவம் கண்டிப்பாக இருக்கும் .
அந்த வகையில் கமல் நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் நாயகன். அந்த படத்திற்கு இசையமைத்தது இளையராஜா. படத்தில் உள்ள அத்தனை பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். எவர்கிரீன் பாடலாகவே மாறிவிட்டது நாயகன் படத்தின் அத்தனை பாடல்களும். குறிப்பாக தென்பாண்டி சீமையிலே பாடல் எப்போது கேட்டாலும் ரசிக்கக் கூடிய வகையில் அமையும் .
அது ஒரு தாலாட்டு பாடலை போல அமைந்ததினால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான பாடலாகவே மாறி இருக்கிறது. அந்த படத்தில் அத்தனை பாடல்களையும் தாலாட்டு முறையில் தான் இசை அமைத்தாராம் இளையராஜா .அதில் இன்னொரு ஹிட் பாடல் நிலா அது வானத்து மேலே. அந்தப் பாடலையும் முதலில் தாலாட்டு வகையில் தான் இசையமைத்தாராம்.
அதன் பிறகு மணிரத்தினம் இளையராஜாவை அழைத்து இது ஜனகராஜுக்காக பாடப்படும் பாடல் ஆகும். அதனால் ஒரு ரிதமிக்காக பாடல் இருந்தால் நன்றாக இருக்கும் என கேட்டுக் கொண்டதின் பேரில் அப்படியே சில வெஸ்டர்ன் டியூன்களை எல்லாம் சேர்த்து கடைசியில் அதை ஒரு ஐட்டம் பாடல் மாதிரி கொடுத்திருக்கிறார் இளையராஜா. ஆனால் முதலில் அந்த பாடலை தாலாட்டு பாடலாக தான் இசையமைத்தாராம். இந்த செய்தியை ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் இளையராஜா