‘சர்தார் 2’ படப்பிடிப்பில் நடந்த கோர விபத்து! சினிமாவில் தொடரும் உயிரிழப்பு.. என்ன பண்ணப் போறாங்களோ

Sardar
2022 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சர்தார். மித்ரன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. சர்தார் திரைப்படத்தில் ராசி கண்ணா, ரஜீஷா விஜயன், லைலா போன்ற பல முக்கிய நடிகர்கள் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தை பிரன்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படம் வெளியாகி நல்ல ஒரு வரவேற்பை பெற்ற நிலையில் இதனுடைய இரண்டாம் பாகத்தையும் எடுக்க பட குழு தயாராகி இருந்தது. அதன் தொடர்ச்சி தான் இப்போது சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி இருக்கின்றது.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். ஒளிப்பதிவு ஜார்ஜ் வில்லியம்ஸ். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் தான் தொடங்கியது. படத்தில் கூடுதல் அப்டேட் ஆக வில்லன் கதாபாத்திரத்தில் எஸ் ஜே சூர்யா இணைந்துள்ளதாக பட குழு அறிவித்துள்ளது. இதுவே அந்த படத்தின் ஹைப்பை இன்னும் அதிகப்படுத்தி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த நிலையில் சர்தார் 2 படத்தை பற்றிய ஒரு ஷாக்கான தகவல் இப்போது சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கின்றது. படத்தின் படப்பிடிப்பில் சண்டைக் காட்சியின் போது ஏற்பட்ட விபத்தில் சண்டை பயிற்சியாளர் ஏழுமலை என்பவர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. இதைப்பற்றி கூடுதல் விசாரணை செய்ய விருகம்பாக்கம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே இந்தியன் 2 படத்திலும் கிரேனில் இருந்து விழுந்து இரண்டு பேர் உயிரிழந்ததாக ஒரு தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இப்போது சர்தார் 2 படத்திலும் இதே மாதிரி ஒரு சம்பவம் என்னும் போது ஒட்டுமொத்த திரையுலகமே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
படப்பிடிப்பை பொருத்தவரைக்கும் ஹீரோ ஹீரோயின்களுக்கு மட்டும் பாதுகாப்பு அளிப்பதோடு நின்றுவிடாமல் அதில் பணிபுரியும் டெக்னீசியன்கள் கலைஞர்கள் என அனைவருக்கும் ஒரு முக்கிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்த செய்தியை அறிந்த பல பேர் கூறி வருகிறார்கள்.