SuyamVaram: தமிழ் சினிமாவில் இதுவரை ஒரே நாளில் எடுத்து சாதனை புரிந்த திரைப்படம் என்றால் அனைவரும் மனதிலும் வரும் முறை பெயர் சுயம்வரம். எப்படி இந்த படம் சாத்தியமானது எதற்காக திடீரென்று இப்படி ஒரு விஷயத்தை தமிழ் சினிமா கையாண்டது என்பது குறித்த ஆச்சரிய தகவல்கள்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்கள் இரண்டு பேர் நடித்தாலே அது பெரிய அளவில் பிரபலமாக பேசப்படும். ஆனால் ஒரு படத்தில் ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் இணைந்து நடிக்கும் போது அந்த படத்திற்கு எப்படி ஒரு விதமான வரவேற்பு இருக்கும் என நினைத்துப் பார்க்கவே வித்தியாசமாக இருக்கிறது.
அப்படி பிரபல தயாரிப்பாளர் கிரிதரலால் 24 மணி நேரத்திற்குள் ஒரு சினிமாவை எடுக்க முடியுமா என்ற ஆசை வந்திருக்கிறது. அதை ஆசையாக நிறுத்தி விடாமல் நடத்த முடிவெடுத்து அதற்கான கதையையும் எழுதி இருக்கிறார்.
11 பிள்ளைகள் பெற்ற அப்பா 60ஆம் கல்யாணத்தில் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கும் நிகழ்வுதான் மொத்த படத்தின் கதை. இதற்கு கதையை அவர் எழுத திரைக்கதையை சுராஜ் எழுதி இருக்கிறார். 14 முன்னணி இயக்குனர்கள், 45 உதவி இயக்குனர்கள், 19 ஒளிப்பதிவாளர்கள், 4 படத்தொகுப்பாளர்கள் இப்படத்தில் இருந்தனர்.
கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு, அர்ஜீன், சுந்தர்.சி, ஆர்.சுந்தர்ராஜன், கேயார் உட்பட 14 இயக்குநர்கள் இணைந்த் இந்த படத்தை உருவாக்கினார்கள். கார்த்திக், பிரபு, சத்யராஜ், பிரபுதேவா, பார்த்திபன், ரம்பா, ரோஜா, குஷ்பு, அர்ஜீன், பாக்கியராஜ், ஊர்வசி உட்பட அந்த சமயத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருந்த எல்லோரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.
ராஜ்குமார் படத்திற்கு இரண்டு பாடல்களையும், தேவா, சிற்பி மற்றும் வித்யாசாகாரி படத்துக்கு தலா ஒரு பாடலையும் இசையமைத்துக் கொடுத்திருந்தனர். கேப்டன் விஜயகாந்த், சிம்ரன், தேவயானி உள்ளிட்டோரும் நடிக்க இருந்த நிலையில் கால்ஷூட் பிரச்னையால் விலகினர். அது போல ஆர்.கே.செல்வமணி மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகரும் கடைசி நேரத்தில் வெளியேறி விட்டனர்.
இப்படம் 23 மணி நேரம் 58 விநாடிகளில் முடிக்கப்பட்டது. வசூல் ரீதியாக வெற்றி படம் இல்லை என்றாலும் படம் இன்றளவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
