மக்காமிஷி.. நான் ரொம்ப பிஸி! இயக்குனருக்கு கொக்கிபோட்ட ஜெயம் ரவி!.. நடக்குமான்னு பார்ப்போம்!...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:35:53  )

தனது விவாகரத்து பிரச்சனைக்கு பிறகு தான் ஜெயம் ரவி படுவேகமாக இருக்கிறார். அவருடைய தோற்றத்திலும் சரி நடவடிக்கைகளிலும் சரி பெரிய மாற்றத்தை பார்க்க முடிகிறது. ஒரு பிரீ பேர்டாக இப்போது ஜெயம் ரவி இருப்பதாக தெரிகிறது.

அவரது நடிப்பில் பிரதர் திரைப்படம் பெரியளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் ஒரு பாடல் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது .இந்த நிலையில் ஜெயம் ரவி எக்கச்சக்கமான படங்களை கைவசம் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

கிட்டத்தட்ட 2026 ஆம் ஆண்டு வரை ஜெயம் ரவி பிசியாக இருப்பார் என தெரிகிறது. அவருடைய ஒரு ஆசை வெற்றிமாறனுடன் எப்படியாவது ஒரு படத்தில் இணைய வேண்டும் என்பதுதானாம்.இதை பேராண்மை படத்தின் போதே தனது ஆசையை வெற்றிமாறனிடம் வெளிப்படுத்தி இருக்கிறார் ஜெயம் ரவி.

என்னை வைத்து எப்படியாவது ஒரு படத்தை இயக்க வேண்டும் என வெற்றிமாறனிடமே நேரடியாக கேட்டாராம். அது இப்போது கை கூடியதாக தெரிகிறது. வெற்றிமாறனை சமீபத்தில் சந்தித்து இருவரும் படத்தை பற்றி பேசி இருக்கிறார்கள். ஜெயம் ரவிக்காக வெற்றிமாறன் ஒரு கதையையும் சொல்லி இருப்பதாக கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு அடிபடுகிறது.

கூடிய சீக்கிரம் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஒரு பக்கம் ஜெயம் ரவியின் லைன் அப்பில் ஏகப்பட்ட படங்கள் வரிசை கட்டிக்கொண்டு நிற்கின்றன. இன்னொரு பக்கம் வெற்றிமாறன் வாடிவாசல் படத்தை கையில் எடுத்து விட்டால் கிட்டத்தட்ட இரண்டு வருடம் அந்த படத்திலேயே தான் கவனம் செலுத்துவார்.

அதனால் இப்போதைக்கு அந்த ஒரு சம்பவம் நடக்காது. வருங்காலத்தில் இருவரும் இணைந்து ஒரு தரமான படத்தை கொடுக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. என்ன இருந்தாலும் ஜெயம் ரவி இருக்கும் இந்த ஃபார்முக்கு வெற்றிமாறனின் ஒரு திரைப்படம் வந்தால் இன்னும் அவருடைய மார்க்கெட் வேறு மாதிரியாக உயரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

Next Story