விஜயை விட நான் மாஸ்!.. நிரூபித்த ஜூனியர் என்.டி.ஆர்!.. கோட் பட வசூலை தாண்டிய தேவரா!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:39:50  )

Devara: இப்போதெல்லாம் பெரிய நடிகர்கள் எல்லோருமே பேன் இண்டியா ஸ்டாராக ஆசைப்படுகிறார்கள். அதாவது, அவர்களின் படங்கள் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் டப் செய்து வெளியாக வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். இதற்கு அடி போட்டது ராஜமவுலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் எல்லா மொழியிலும் செய்த வசூல்தான்.

அதன்பின் வெளியான ஆர்.ஆர்.ஆர், கேஜிஎப், காந்தாரா, கேஜிஎப் 2 போன்ற படங்களும் பேன் இண்டியா படங்களாகவே உருவானது. தனுஷ் தனது படங்களை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியிட்டு வருகிறார். சிவகார்த்திகேயனுக்கும் அந்த ஆசை வந்து, அவரின் பிரின்ஸ் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியானது.

ரஜினியின் ஜெயிலர் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. அதேபோல், விஜயின் படங்களும் 3 மொழிகளிலும் வெளியாக துவங்கிவிட்டது. வாரிசு, லியோ, கோட் படங்கள் அப்படித்தான் வெளியானது. கோட் படம் ஆந்திராவில் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. ஹிந்தியிலும் பெரிய வசூல் இல்லை.

இந்நிலையில்தான் ஜூனியர் என்.டி.ஆரின் தேவரா திரைப்படம் செப்டம்பர் 27ம் தேதி வெளியானது. தமிழில் இப்படம் பெரிய வசூலை செய்யவில்லை. தமிழ்நாட்டில் வெறும் ஒன்றரை கோடி வசூலை மட்டுமே செய்திருந்தது. ஆனால், ஆந்திராவில் இப்படம் நல்ல வசூலை பெற்றது.

இதுவரை அப்படம் 466 கோடிகளை வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமே அறிவித்துள்ளது. விஜயின் கோட் திரைப்படம் மொத்தமாக 413 கோடியை மட்டுமே வசூல் செய்திருந்தது. எனவே, பேன் இண்டியா ஸ்டாரில் விஜயை ஜூனியர் என்.டி.ஆர் முந்திவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

கோட் படம் ஆயிரம் கோடி வசூலிக்கும் என்றெல்லாம் அடித்துவிட்டார்கள். ஆனால், அப்படத்தில் இடம்பெற்றிருந்த சி.எஸ்.கே கிரிக்கெட் அணி தொடர்பான காட்சிகளை வட மாநில, ஆந்திர, கேரள மற்றும் கர்நாடக ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் ட்ரோல் செய்தார்கள். இதனால் அந்த மாநிலங்களில் கோட் வசூலை பெறவில்லை என வெங்கட்பிரபுவோ ஒரு பேட்டியில் சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story